பிரிட்டிஷ் முன்னால் பிரதமர் டோனி ப்ளேய்ரின் சிஸ்டர் இன் லா இஸ்லாத்தை தழுவினார்!

லண்டனில் 1967 ஆம் ஆண்டு பிறந்த லாஉரன் பூத் ( Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். இவர் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார். லாஉரன் பூத் ( Lauren Booth) முன்னால் பிரிட்டிஷ் பிரதமரின் மனைவியின் தங்கை என்பது குறிப்பிடதக்கது.

நான் 6 வாரத்திற்கு முன்பு ஈரானிற்கு சென்றிரந்தேன் அங்கு முஸ்லிம்கள் சமூகத்தினருடன் பழகினேன் அது எனக்கு மிகுந்த மனநிம்மதியை அளித்தது. மேலும் நான் இப்போது 5 வேலை தொழுகின்றேன் பள்ளிவாசலுக்கு செல்கின்றேன். தினமும் திருக்குர்ஆனை படிக்கின்றேன். வீட்டை விட்டு வேளியே செல்லும் போது ஹிஜாபுடன் செல்கின்றேன்.

இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதிலிருந்து மது அருந்தும் பழக்கை விட்டு விட்டேன் தற்போது நான் மது அருந்தி 45 நாட்களாகின்றது. இஸ்லாமிய சமூகம் மிகவும் அமைதியானது, நானும் அதில் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன் என லாஉரன் பூத் ( Lauren Booth) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவர் ஈரானிற்கு சென்றிருக்கையில்  அங்குள்ள தர்ஹா ஒன்றை பார்வையிட சென்றதாகவும் அங்கு அவருக்கு ஆண்மீக உணர்வு ஏற்பட்டதாகவும்  அதனால் இஸ்லாத்தை ஏற்றதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. தர்ஹாவிற்கு சென்றதால் தான் அவர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது தவறான செய்தியாகும்.

அவர் ஈரானிற்கு செல்வதற்கு முன்பாகவே அவர் இஸ்லாத்தின் மேல் மரியாதை வைத்துள்ளார், மேலும் கணிசமான காலங்கள் இஸ்லாமியர்கள் வாழும் பாலஸ்தீனத்தில் பணி புரிந்துள்ளார். இஸ்லாத்தை பற்றிக்கூறுகையில், “(இஸ்லாம்) எனக்கு எப்போதுமே வலிமை மற்றும் மகிழ்ச்சியை தந்துள்ளது என்னை வெகுவாக கவர்ந்தது எனக் கூறியுள்ளார். இவ்வாறு லண்டனில வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவிக்கின்றது.

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் அவர் தர்ஹாவிற்கு சென்றிருப்பதால் முஸ்லிம்களை பார்த்து விட்டு தெரியாமல் சென்றிருக்கக் கூடும். ஏனேனில் இஸ்லாமிய புத்தகங்கள் என்ற பெயரில் உள்ள இஸ்லாத்திற்கு எதிரான நூல்களை அவர் தினமும் படிப்பதாக கூறவில்லை  மாறாக அவர் தினமும்  திருக்குர்ஆனை படிப்பதாகவே தெரிவித்துள்ளார்.

இறைவன் அவருக்கு சரியான நேர்வழியை காட்ட பிரார்த்தி்ப்போமாக!