சிறுவர் இல்லம் – பரபரப்பாக நடைபெறும் கட்டிட பணிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக கடலூரில் நடத்தப்பட்டு வந்த அனாதை இல்லம் தற்போது நாகூரிற்கு இடம் மாற்றப்பட்டு இறைவனது கிருபையால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் அனாதை இல்லத்திற்கென தனி கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு தற்போது தஞ்சாவுர் மாவட்டம் சுமாமிமலையில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக நடைபெற்றுவரும் கட்டிட வேலைகள். கடந்த மே மாதம் 20 ஆம் தேதி மாநில நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கட்டிட வேலைக்கு 20 லட்சம் வரை தேவைப்படுகின்றது. அனாதை இல்ல கட்டிட பணிக்காக தங்களின் நன்கொடைகளை வாரி வழங்கிடுவீர்! Click Here to donate

மேலும் கட்டுமாணப் பணிகளின் புகைப்படங்கள்