TNTJ மாநிலத் தலைமை நடத்தும் பிரச்சாரகர்களுக்கான தேர்வு!

திருக்குர்ஆனும், குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிவழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்ற சத்தியக் கொள்கையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் தெள்ளத்தெளிவாக மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லி வருகின்றது. இந்தப் பிரச்சாரத்தின் ஆணிவேராக இந்த சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்தியம்பும் நமது ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்களது மார்க்க அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையிலும், அதை இன்னும் மெருகூட்டும் வகையிலும் பிரச்சாரகர்களுக்கான தேர்வுகளை நடத்த மேலாண்மைக்குழு மற்றும் மாநில நிர்வாகிகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் இன்ஷா அல்லாஹ்!  வரக்கூடிய பிப்ரவரி மாதம் 19 மற்றும் 20 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் மையங்கள் & பொறுப்பாளர்கள் விபரம்:

சென்னை – ரஹ்மத்துல்லாஹ்
மதுரை – அல்தாஃபி
கோவை – எம்.ஐ
திருவரூர் – அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி
நெல்லை – அப்பாஸ் அலி

மேற்கண்ட இடங்களில் குறிப்பிட்ட பிப்ரவரி 19 & 20 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்…

பாடத்திட்டம்:
இந்த தேர்வில் முழுக்க முழுக்க நமது இணையதளங்களில் உள்ள ஆக்கங்களே வினாத்தாளில் கேள்வியாக எழுப்பப்பட இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆன்லைன்பீஜே இணையதளத்தில் கேள்வி-பதில் பகுதிகளில் இருந்து வினாத்தாளுக்குரிய வினாக்கள் தொகுக்கப்பட இருக்கின்றன.

வினாத்தாள்களின் விபரம்:
1.அகீதா சம்பந்தமான கேள்விகள்
2.மசாயீல்கள் சம்பந்தமான கேள்விகள்
3.திருக்குர்ஆன் உச்சரிப்பு
4.திருக்குர்ஆன் மனனம் சம்பந்தமான கேள்விகள்
5.முக்கியமான துஆக்கள்
6.ஹதீஸ் கலை
7.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இயக்க நிலைபாடுகள்

மேற்குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய தாயீகளுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
இந்தப் பரீட்சையில் மதரஸாக்களில் சேர்ந்து படிக்காத பிரச்சாரகள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் தமது சொந்த முகவரியுடன் மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மதுல்லா அவர்களுக்கு மாநிலத் தலைமை முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுமையம் மற்றும் விபரங்கள் தெரிவிக்கப்படும்.

ஜனவரி 15 ஆம் தேதிக்குள் தாயீக்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பு:
ஆன்லைன்பீஜே இணையதளத்தின் கேள்வி-பதில் பகுதி உள்ள  பதில்களை பிரச்சாரகர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கு பயன்படுத்திக் கொள்ளவும்.