TNTJ மர்கசில் போலியோ சோட்டு மருந்து முகாம் – மேலப்பாளையம்

கடந்த 15-04-2012 (ஞாயிறு)அன்று TNTJ நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் அரசு போலியோசொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 5 வயதுக்குட்பட்ட ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.

இது தவிர அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று மேலப்பாளையம் நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட முகாம்களில் TNTJ தொண்டர்கள் களப்பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கான உதவிகளைச் செய்தனர்.