TNTJ கிளை நிர்வாகி குடும்பம் விபத்தில் பலியான சம்பவம்: நேரடி ரிபோர்ட்! இறந்தவரின் கடனை ஏற்றுக் கொண்டது கோவை TNTJ

TNTJ கிளை நிர்வாகி குடும்பம் விபத்தில் பலியான சம்பவம்: நேரடி டிபோர்ட்!கடந்த 22.06.2009 திங்கட்கிழமை மதியம் 3-மணி அளவில் பல்லடம் முக்கிய சாலையில் (கோவையில் இருந்து திருச்சி சாலை நோக்கி) சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மணல் லாரி மோதியதில் அதிகமானோர் உயிர் இழந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டஉடன் கோவையிலிருந்து சகோதரர்கள் புறப்பட ஆயத்தமானார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் பல குழுக்களாக பிரிந்து சம்பவ இடத்திற்கு ஒரு குழுவும். கோவை அரசு மருத்துவமனைக்கு ஒரு குழுவும். தனியார் மருத்துவமனையான கங்கா மற்றும் KMCH க்கு ஒரு குழுவும் சென்று காயமடைந்தவர்களுக்கு இரத்தம் முதலுதவி மற்றும் அவசரசிகிச்சைகளுக்கான பணிகளை மேற்கொண்டனர்.
பல்லடம் சென்ற நமது TNTJ குழு விபத்தில் காயமடைந்தவர்களும் உயிர்இழந்தவர்களில் 9-பேரும் கோவை NH ரோடு (நவாப் ஹக்கீம் சாலை) கிளை தலைவர் கனி (முஹமமத்உசேன்கனி) மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என்பதை உறுதி செய்த உடன் ஒருசில மாவட்ட நிர்வாகிகளைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் பல்லடம் விரைந்தனர்.
கலங்கியநிலையிலும்துரிதநடவடிக்கையாக இரவோடு இரவாக பிரேதபரிசோதனை முடித்துவிடவேண்டும் என்பதால் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு அதிகாரிகள் காவல்துறைஅதிகாரிகள் மருத்துவஅதிகாரிகள் என அனைவரையும் சந்தித்து. இரவு 1.30 மணி அளவில் 5-பெண்கள் 4-ஆண்கள் என 9-பேர் உடல்களையும் பிரேதபரிசோதனை முடித்து 9-ஆம்புலன்ஸ்களில் ஏற்றிக்கொண்டு கோவை கொண்டு வந்தனர்.
3-பெண்களின் முகங்களை திறக்கவேண்டாம் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
(கிளைத்தலைவர் கனி அவர்கள் ஆஐயு நர்சரி பள்ளிக்கு முன் வைத்துதான் மாணவ-மாணவிகளுக்கு 21.06.2009 ஞாயிற்றுக்கிழமை நோட்புக் நிகழ்ச்சியை நடத்தினார்)

இணையதளத்தில் வெளியான இந்த செய்தியை படிக்க Click Here

9 ஜனாஸாவும் என்.எச்.ரோடு MIA நர்சரி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டன. 23.06.2009 செவ்வாய் கிழமை காலை 9-மணிக்கு பூ மார்கட் லங்கர்கானா கபரஸ்தானில் அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கொள்கைச் சகோதரர்கள். தூரத்துசொந்தங்கள். ஆட்சித்தலைவர் மேயர் அதிகாதிகள் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டனர் பின்னர் பல்லாயிரக்கனக்கான மக்கள் கலந்துகொண்ட ஜனாஸா ஊர்வலம் வழியில் இருந்த மக்களை கலங்க வைத்தது அப்பகுதியே சோகத்தில் முழ்கியது.
சகோதரர் கனி மற்றும் அவரது மனைவி ஏகத்துவகொள்கை கொண்டவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகிகள் ஜனாஸா தொழுகைபற்றி மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்திருந்தனர். சில இடையூருகள் ஏற்பட்டாலும் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் அப்துர்ரஹீம் அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்.
மாநிலசெயலாளர் சகோ.ரெஜாக்-

முன்னாள் மாநிலதுணைபொதுச் செயலாளர் சகோ.A.S அலாவுதீன் கலந்துகொண்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் உடனடி ஆலோசனை செய்து கொள்கை சகோதரர் கனி அவர்கள் கடன் வாங்கி இருந்தால் அதை தள்ளுபடி செய்ய மனம் உள்ளவர்கள் தள்ளுபடி செய்யலாம்.

இயலாதவர்கள் அந்தத்தொகையை தகுந்த ஆதாரங்களை தந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று கபரஸ்தானிலேயே அறிவித்தது.

ஏகத்துவவாதிகள் சுன்னத்தை பேணுபவர்கள் என்பதற்கு இவையெல்லாம் அடையாளமாய் திகழ்ந்தன.

புகைப்படங்கள்:

உயிரிழந்த 9 பேர்கள்
உயிரிழந்த 9 பேர்கள்
விபத்திற்குள்ளான டெம்போ ட்ராவலர்
விபத்திற்குள்ளான டெம்போ ட்ராவலர்
மோதிய மணல் லாரி
மோதிய மணல் லாரி
ஜனாஸா கொண்டு செல்லும் போது
ஜனாஸா கொண்டு செல்லும் போது
சிறு காயமின்றி உயிர் தப்பிய சிறுவன் (தன் குடும்பம் பலியானதை அறியாமல்...)
சிறு காயமின்றி உயிர் தப்பிய சிறுவன் (தன் குடும்பம் பலியானதை அறியாமல்...)