மாநிலச் செயற்குழு – திருச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு

நாள் : 14-02-2021

இடம் : SS மஹால், திருச்சி

தீர்மானங்கள்

14.02.2021 அன்று திருச்சி எஸ் எஸ் மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  1. இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. மறைந்த முதல்வர். ஜெ.ஜெயலலிதா அவர்கள் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதி அளித்தார். சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் அம்மாவின் வழியில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அரசு உடனடியாக இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்குமாறு இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
  2. பாண்டிச்சேரி மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 6.1 சதவீத விழுக்காடு இடஒதுக்கீட்டு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும்படி பாண்டிச்சேரி அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
  3. இஸ்லாமியர்கள் உயிருனும் மேலாக மதிக்கக்கூடிய ஒழுக்கசீலர், பண்பாளர், கற்புக்கரசர், மனிதர்குல மாணிக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் கல்யாணராமன் என்கிற எதிரி பேசிவந்தான். சமீபத்தில் மேட்டுப்பாளையத்தில் அவன் பேசிய பேச்சு கோடான கோடி இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .பலமதத்தவர்கள் கலந்து வாழ்ந்தாலும் மதச்சார்பற்ற நாடாக திகழக்கூடிய இந்தியாவின் இறையாண்மையை கீறிக்கிழிக்கத் துடிக்கும் கல்யாண ராமன் என்ற எதிரியை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
  4. நபிகளாரை இகழ்ந்து பேசிய சமூக விரோதி கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான் . அவன் செய்த இழி செயலுக்கு இது போதுமானதாக இல்லை. எனவே அவன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு நீண்டகாலங்களில் அவனை சிறையில் அடைத்து பாடம் புகட்ட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
  5. இது போன்ற கல்யாண ராமன்களை தூண்டிவிட்டு அமைதிப் பூங்கா தமிழகத்தில் கலவரத்தை தூண்ட பாஜக முயற்சிக்கிறது. இவர்களின் எண்ணம் ஒருக்காலும் ஈடேறாது என்பதை இச்செயற்குழு தெரிவிக்கின்றது,
  6. 6. சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் குறிப்பிடும் படியான மக்கள் நலத்திட்டங்கள் ஏதும் இல்லை. குறிப்பாக கொரோனா பேரிடரில் பாதிக்கப்பட்ட பாமர , பாட்டாளி மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.
  7. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசுக்கு சொந்தமான, அதிக வருவாயை ஈட்டித்தருகின்ற தங்க முட்டையிடும் வாத்துக்களைப் போன்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறது.  இரயில்வே துறை , விமான நிலையங்கள் என்று வரிசையாக இவர்களின் இத்தாரை வார்ப்பு தொடர்கின்றது. இதை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் பொதுத்துறை நிறுவனங்களை அரசே முன்னிற்று நடத்த வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
  8. நபியை இகழ்ந்து பேசுவதால் நபியின் புகழ் மங்காது அது மென்மேலும் ஓங்கும் . என்பதை பறைசாற்றும் விதமாக) நபிகள் நாயகம் அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றை தரணி எங்கும் எடுத்துச் சொல்லும் விதமாக பிப்ரவரி 3 முதல் ஏப்ரல் 3 வரை அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது (ஸல்) என்ற செயல்திட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது. இந்த பிரச்சாரங்களை சிறந்த முறையில் வீரியத்துடன் மேற்கொள்ளுமாறு ஏகத்துவ சொந்தங்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
  9. இந்திய நாட்டை உருவாக்கியதிலும் , நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. உடனடியாக இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்றால் இச்சட்டத்திற்கு எதிரான தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதை இச்செயற்குழு தெரிவிக்கின்றது.