தமிழகத்தில் ஸபர் மாதம் ஆரம்பம் – 2018

10.10.18 புதன் கிழமை மக்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

அதன் அடிப்படையில் இன்று(10.10.18) குமரி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பரவலாக பிறை தென்பட்டதான செய்தி வந்தது.
அது உறுதி செய்யப்பட்டதால், ஸபர் மாதத்தின் முதல் பிறை இன்று மக்ரிப் முதல் (10.10.18 புதன் கிழமை) ஆரம்பமாகிறது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்