விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்..

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்..

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 10 ஆம் வகுப்பு பயிலும் 15 வயது ஜெயஸ்ரீ என்ற சிறுமி முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இங்கேதான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்பது இந்த சமுதாயத்தின் மீது அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாகவே உள்ளது. மனதில் கொஞ்சம் கூட ஈவு , இறக்கமற்ற இந்த கொடுஞ் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

மரணத் தருவாயில் அச்சிறுமி பேசும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. கண் கொண்டு காண இயலாத கொடுமையான காட்சியாக அது உள்ளது.

அதில் அதிமுக வை சேர்ந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் தான் தன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டனர் என்று அச்சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்…

தற்போது காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது.

இது போன்ற நிகழ்வு நடந்திருப்பது தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் முறை அல்ல. இது தொடர்கதையாகி வருகிறது.

மனிதாபிமானமற்ற இத்தகைய கொடும் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதன் மூலமே இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும்.

அப்பாவிச் சிறுமியை உயிருடன் தீயிட்டுக் கொளுத்திய மனித மிருகங்களுக்கு அதிகப்பட்ச தண்டையாக மரண தண்டனை வழங்கப் பட வேண்டும் என நீதித்துறையை கேட்டுக் கொள்வதுடன்,

சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு.
இ. முஹம்மது
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.