கொரோனா சம்பந்தமான சுகாதாரத்துறையின் கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்

கொரோனா சம்பந்தமான சுகாதாரத்துறையின் கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக, தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை நோய் பரவலைத் தடுக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வீடு வீடாகச் சென்று கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்தும் முதியவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.

இது சிஏஏ, என்.பி.ஆர் போன்ற கணக்கெடுப்பு அல்ல.

நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவோர் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்வதற்கும் அவர் மூலம் பிறருக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கும் இக்கணக்கெடுப்பு அவசியமானதாகிறது.

நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதே இதன் நோக்கமாக உள்ளதால் சுகாதாரத் துறையின் இந்த கணக்கெடுப்பிற்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கணக்கெடுப்பு பணியாளர்கள் நம் வீடுகளை நோக்கி வரும்போது நம்மிடம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி நோய் பரவலை கட்டுப்படுத்திட அரசு மற்றும் சுகாதாரத்துறைக்கு நாம் உதவிட வேண்டும்.

என்.பி.ஆர் சந்தேகம் மற்றும் பேஸ்புக் வாட்ஸப்பில் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்புணர்வு அடிப்படையிலான தகவல்களை பார்த்து அறியாமையில் சில முஸ்லிம்கள் சுகாதாரத்துறையின் இக்கணக்கெடுப்பிற்கு உதவ முன்வராமல் போகலாம்.

உடனே அதிகாரிகள் அதிகாரப் போக்குடன் நடந்து கொள்ளாமல் தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்களிடம் முறையாக தெரிவித்தால் தெளிவுபட எடுத்துரைத்து அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கும் பணியில் மக்களை ஈடுபடுத்துவார்கள்.

தொடர்புக்கு,
காஞ்சி இப்ராஹிம் ( 7550277119}
மாநில செயலாளர்

அதே வேளை இத்தகைய கணக்கெடுப்பின் போது சில அதிகாரிகள் முறையற்று மக்களை நடத்தினாலோ, முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தினாலோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தால் அதை மேலதிகாரியின் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று துறை ரீதியான நடவடிக்கையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்