பேரிடர் உதவித் தொகையை ஐயாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!

பேரிடர் உதவித் தொகையை ஐயாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!

தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கின்றது.

அதேவேளையில் தற்போது ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை விரிவு படுத்தியுள்ளது.
இந்த காலநீட்டிப்பு தேவையான ஒன்று என்பதை தமிழக மக்கள் விளங்கி வைத்துள்ளனர்.

அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் .
ஆனால் இதில் எந்தவித தொழிலும் செய்ய முடியாமல் ஏழை கூலி தொழிலாளர்கள் அடித்தட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

ஏழை அடித்தட்டு மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறைக்கு உள்ளாகும் சூழல் உள்ளது.

தமிழக அரசு கொரோனா பேரிடர் உதவியாக ரூபாய் 1000 அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது என்பதை கவனத்தில் கொண்டு பேரிடர் உதவியை குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5000 உடனடியாக வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில அரசை கேட்டுக் கொள்கிறது.

கொரோனாவால் மக்கள் பலியாகி விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் அரசு பசி, பஞ்சத்தால் மக்கள் மாண்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படிக்கு
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்