ஊடக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

ஊடக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோய்க்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இதற்கு ஒரே ஒரு தீர்வு சமூக விலகல் தான்.

அதன் அடிப்படையில் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன. இந்தியாவும் கடந்த மார்ச் 24 ந் தேதி அன்று இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கின்றது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வழியாக கொரோனா தொற்று இந்தியாவில் பரவியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின..

இஸ்லாமிய சமுதாயமே இந்த நோய் பரவ காரணம் என மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகள் பரப்பப்பட்டன.

இது இஸ்லாமிய சமுதாய மக்களை மிகவும் வேதனை அடையச் செய்திருக்கிறது.

நம்முடைய அண்டை நாடான இலங்கை ஜனவரி 29ந் தேதியே சீனாவுக்கான விசாவை ரத்து செய்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையை எடுத்தது.

இது போன்று உலகில் பல நாடுகள் கொரோனா வைரஸின் பாய்ச்சலிலிருந்து தங்கள் நாட்டு மக்களை காக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

மார்ச் மாதம் 6ந் தேதி அன்று முன்னால் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவில் சமூக அமைதியின்மை, பாதிப்புக்குள்ளான இந்திய பொருளாதாரம், பரவும் கொரோனா தொற்று நோய் குறித்து எச்சரிக்கை மணி அடித்தார்கள்.

அவரது தொலை நோக்கு பார்வை கொண்ட அந்த ஆலோசனைபடி, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டது.

இந்தியாவில் இந்த நோய் பரவுவதற்கு காரணம் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள் மூலமாகத் தான்.

வெளிநாட்டு பயணிகளை முறையாக பரிசோதிக்காமல் இந்தியாவில் அனுமதித்ததும் விமான சேவையை தொடர்ந்து நடத்தியதும் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதற்கு அடிப்படை காரணமாகும்.

மத்திய அரசு வெளிநாட்டு பயணிகளை முன்னதாகவே தடுத்து இருந்தால் இந்நிலை ஏற்பட்டு இருக்காது.

டெல்லி மாநாட்டுக்கு முன்பாகவே இந்தியாவில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது பரவுவததற்கு காரணம் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள் தான் என்ற உண்மையை அனைவரும் அறிந்திருக்கின்றனர்.

இங்கு தான் மத்திய அரசின் மெத்தனப்போக்கு அப்பட்டமாக வெளிப்படுகின்றது. அது, தன்னுடைய அந்த மெத்தனப் போக்கை மறைப்பதற்காகவே தப்லீக் ஜமாஅத்தினரை, மொத்தத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை அது பலிகடாவாக ஆக்கியிருக்கின்றது என்று நடுநிலை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள்.

உண்மை நிலைமை இப்படி இருக்க, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வழியாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டது என தவறான தகவல்களை சில ஊடகங்கள் திரும்ப திரும்ப பதிய வைத்தன.

இதனால் இஸ்லாமிய சமுதாயம் கடுமையாக பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கிறது.

ஊடகங்கள்,சமூக வலைதங்களில் வரும் செய்திகள் அனைத்தையும் உண்மை என நம்பும் பாமர மக்கள் கொரோனா பயத்தின் காரணமாக இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல ஊர் தெருக்களில் முஸ்லிம்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆங்காங்கே, முஸ்லிம்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ டெல்லி மாநாடு காரணம் என்ற கருத்தில் ஊடகங்களில் செய்தி வெளியிட்டதால் ஒரு சமூகமே குற்றவாளியைப் போல நிறுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் மனித நேயம் கூட இல்லாமல் அவர்களை கண்டு வெறுத்து ஒதுக்கும் நிலை சக மனிதர்களிடம் உள்ளது.

மதுரையில் ஒரு முஸ்லிம் கூலித் தொழிலாளிக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கை தெளிவாக தெரிவித்தும் அதை சமூகம் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. இதன் விளைவு அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது ஊடகத்துறையினருக்கு நன்கு தெரிந்த உணமையாகும்.

எனவே, முஸ்லிம்கள் தான் கொரோனாவை பரப்பினார்கள் என்கிற தவறான கண்ணோட்டத்தை மாற்றி ஆரோக்கியமான செய்திகளை வெளியிட்டு முஸ்லிம் சமுதாயத்தின் மீது உள்ள கலங்கத்தை துடைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

A Kind appeal to all media houses and journalists

As you all know Coronavirus is threatening the world.

Although the cure for this disease has not yet been discovered, the only solution is social distancing.

On the basis of this, the countries of the world have issued lockdown. India also issued a whole country three-week lockdown on 24th March

According to some media reports, Coronavirus outbreak had happened in India through attendees from a conference at Delhi

People understood that the cause for spread of this disease in the country is due to Muslims based on news which are circulated virally.

This caused the Muslims to suffer greatly

Our neighboring country Sri Lanka took the precautionary measure by canceling the visas for China well in advance from 29th of January itself.

Similarly, many countries in the world have taken precautions to protect their people from the spread of coronavirus well in advance.

Earlier on 6th of March, former Prime Minister Dr. Manmohan Singh raised alarm bells on the social unrest, the Indian economy and about the outbreak of coronavirus in India.

According to his foresight counsel, the Central government had failed to take precautionary measures.

The outbreak of the disease in India was mainly caused by travelers from abroad.

The main reason for the spread of coronavirus in India is due to foreign passengers who have been permitted without proper inspection & screening.

This would not have been the case if the central government had detained foreign travelers much earlier.

Many people in India suffered from coronavirus before the Delhi congregation event. Everybody is aware of the fact that it spread in India due to travelers from Covid-19 affected countries.

This is where the central government’s slur is exposed. Unbiased people clearly understood that Central government has made the Muslim community as a whole a scapegoat in order to conceal its tendency

In fact, some media have repeatedly misrepresented the that coronavirus outbreak in many states of India, particularly in Tamil Nadu, was through the attendees of the Delhi conference.

Due to which the Muslims are severely affected and pushed into depression.

Due to such news on Social networking sites which made the common people to believe that it has been spreading in India due to Muslims so they started expressing their hatred towards Muslims openly.

In many cities of Tamil Nadu Muslims are unable to walk on the streets. There have been incidents where Muslims have been attacked.

Due to such news by media which blamed Delhi gathering as main reason for the spread of coronavirus in Tamilnadu for which entire Muslim community is portrayed as culprits.

Fellow human beings are showing displeasure and hate by seeing coronavirus affected person rather than saying a kind word as a human.

The community has refused to accept the medical report which clearly states that a Muslim worker in Madurai had no coronavirus. As a result, he committed suicide this fact is well known to the media.

Therefore, we kindly appeal to the Media people to post sensible news and to change the misconception that has been spread against the Muslim community in recent days.

Regards,
E. Muhammad – General Secretary,
Tamil Nadu Thowheed Jamaath (TNTJ)