தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு – 18.09.2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா தலைமையில் மேலாண்மைக்குழு தலைவர் எம்.எஸ். சுலைமான், மாநில பொதுச் செயலாளர் இ முஹம்மது,
மாநில துணைத் தலைவர் பா.அப்துல் ரஹ்மான், மாநிலப் பொருளாளர் – ஏ.கே.அப்துல் ரஹீம் ஆகியோர் இன்று 18.09.2021 காலை 11:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்ததுடன், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக அதிகப்படுத்தி தர வலியுறுத்தியும், நீண்ட காலமாக சிறையில் வாடிவரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.