நோன்பு கஞ்சிக்கு வழங்கும் விலையில்லா அரிசியை தாமதிக்காமல் உடனே வழங்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

நோன்பு கஞ்சிக்கு வழங்கும் விலையில்லா அரிசியை தாமதிக்காமல் உடனே வழங்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை பசித்திருந்து நோன்பு பிடிப்பது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று ஆகும்.

மாலையில் நோன்பு திறக்கும் போது பள்ளிவாசல்களில் வழங்கும் அரிசி கஞ்சியை உண்டு நோன்பு திறப்பதை முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

பள்ளிவாசல்களில் வழங்கும் நோன்பு கஞ்சிக்காக தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வராக கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் இருந்த போதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

பகல் முழுவதும் சாப்பிடாமல் இருக்கும் ஏழை எளிய மக்களிடம் இது நல்ல வரவேற்பை பெற்றது.

இன்னும் ஒரு சில நாட்களில் ரமலான் மாதத்தின் நோன்பு துவங்க உள்ளது. இது வரை தமிழக அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.

காலம் கடந்து திட்டங்களை செயல் படுத்தாமல் உரிய நேரத்தில் நோன்பு கஞ்சிக்கு விலையில்லா அரிசி திட்டத்தை செயல் படுத்த வேண்டும்.

தமிழக அரசு தாமதிக்காமல் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை விரைந்து வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

ஊடக தொடர்புக்கு: 9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்