தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நன்றி

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நன்றி

கருப்பு சட்டமான சிஏஏ விற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மனதார பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளது.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்திய நாட்டு குடிமக்கள் என்பதை நிருபிக்க கருப்பு சட்டம் சிஏஏ விற்கு எதிராக போராடினார்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டம் நடந்தது இல்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவரும் நீண்ட நாட்களாக போராட்டத்தை நடத்தினர்.

மத சார்பற்ற இந்தியாவில் மத ரீதியாக மக்களை பிளக்கும் கொடிய சட்டமாக இது இருந்ததுதான் அதற்கு காரணம்.

சுதந்திர போராட்டத்தை நினைவுகூரும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் தன்னெழுச்சியுடன் நடைபெற்ற அப்போராட்டங்களின் ஒரே கோரிக்கை சிஏஏ திரும்ப பெறப்பட வேண்டும். நமது அரசியல் சாசனம் வலியுறுத்தும் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்பதே.

இந்த கொடிய சட்டத்திற்கு ஆதரவாக, அன்று தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு வாக்களித்து முஸ்லிம்களின் முதுகளில் குத்தியது.

இந்தியாவில் நடந்த போராட்டங்களின் போது பல மாநில அரசுகள் சிஏஏ விற்கு எதிரான தீர்மானத்தை சட்டமனறத்தில் நிறைவேற்றின. அதிமுக தலைமையில் ஆன தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற தயங்கியது. தமிழக முஸ்லிம்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பை சந்தித்து தற்போது அதிமுக ஆட்சியை இழந்துள்ளது.

CAAவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்கள்
• கேரளா – டிசம்பர் 31, 2019
• பஞ்சாப் – ஜனவரி 17, 2020
• ராஜஸ்தான் – ஜனவரி 25, 2020
• மேற்கு வங்கம் – ஜனவரி 27, 2020
• சட்டீஸ்கர் – ஜனவரி 30, 2020
• மத்திய பிரதேசம் – பிப்ரவரி 5, 2020
• புதுச்சேரி – பிப்ரவரி 12, 2020
• தமிழ்நாடு – செப்டம்பர் 8, 2021

NPR, NRC விற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்கள்
• டெல்லி – மார்ச் 13, 2020
• ஆந்திரா – ஜூன் 17, 2020
• ஜார்கண்ட் – மார்ச் 24, 2020

NPR, NRC, CAA விற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்கள்
• தெலுங்கானா – மார்ச் 16, 2020

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிஏஏ விற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார். தமிழக மக்கள் இதன் காரணமாக பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழக அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.