மீண்டும் மதத்தின் பெயரால் கும்பல் தாக்குதல் செய்து கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை.

மீண்டும் மதத்தின் பெயரால் கும்பல் தாக்குதல் செய்து கொலை –
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை.
ஹரியானாவின் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த  ஜிம் பயிற்சியாளரான ஆசிப் கான் என்ற இஸ்லாமியரை ஞாயிறு இரவு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கும்பல்  “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட சொல்லி கொடுரமாக கொலை செய்துள்ளது.
காரில் பயணம் மேற்கொண்ட ஆசிஃபை 15 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து “இந்த முஸ்லிமை கொல்” என்று கோஷமிட்டு கொலை செய்துள்ளது. தாக்குதலில் படுகாயம் அடைந்த ரஷீத் மற்றும் வாசிஃப் உயிர் தப்பியுள்ளனர்.
நாங்கிலி என்ற கிராமத்தில் ஆசிஃபின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவத்தை நேரில் பார்த்த ஆசிஃபின் சகோதரர் ரஷீத் இந்த கொடூர தாக்குதலை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து  “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் கும்பல்களின் அராஜகம் அதிகரித்துள்ளது.
கொரோனா பேரிடரில் இந்திய மக்கள் அனைவரும் அல்லல் படும் நேரத்தில் இது போன்ற வன்முறை சம்பவம் நடந்துள்ளது.
இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து இனி வரும் காலங்களில் இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Tamil Nadu Thowheed Jamaath strongly condemns the mob lynching in the name of religion that took place in Haryana, demands capital punishment for the culprits.
Asif Khan, a gym trainer from Haryana’s Mewat district, was brutally murdered by a Hindutva terror module who forced Asif to chant “Jai Shree Ram” on the night of 16th May, 2021.
“A group of 15 stopped the car and started abusing the passengers. They shouted “maar mulle ko” — Kill Muslims— and lynched Khan”, Hasan Kha, Khan’s uncle told Maktoob. Rashid (31) and Wasif (22), co-passengers with Khan were also assaulted but survived the attack. Rashid remains in critical care.
“The mob hit the car from behind and when they stopped the car they hurled stones at the car,” says Hasan. ” The other two escaped the attack but Khan was captured and lynched”.
Khan was found dead in Nangli, a village on the outskirts of Sonha, Haryana. Khan’s relative also shared that there is a history of hostility between Khan and Hindu groups in his village.
Asif’s brother Rashid, who witnessed the incident, narrated the ordeal. Its shocking that no one has been arrested yet in connection with this lynching.
Ever since BJP came to power in the Union Government, the anarchy of mob violence in the name of “Jai Shree Ram” has been on steady rise.
Such brutal attacks are taking place when the whole nation is suffocating due to Oxygen shortage and are turned down due to scarcity of beds amidst the Covid pandemic.
Tamil Nadu Thowheed Jamaath urges the concerned authority to arrest the culprits and hang them in full public view to prevent such untoward incidents in the near future.
Regards,
E. Mohammed,
State General Secretary,
Tamil Nadu Thowheed Jamaath