உ.பி.யில் முஸ்லிம் இளைஞர் படுகொலை, காவல்துறை நடத்திய காட்டுத் தர்பார்!* தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

உ.பி.யில் முஸ்லிம் இளைஞர் படுகொலை, காவல்துறை நடத்திய காட்டுத் தர்பார்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
உத்திர பிரதேசம் உன்னாவில் காய்கறி விற்று கொண்டிருந்த முஹம்மது பைசல் என்ற இஸ்லாமிய இளைஞனை காவல் துறையினர் அழைத்து சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.
காவல் துறையின் இந்த தாக்குதலால் முஹம்மது பைசல் சுய நினைவை இழந்துள்ளார்.
சுய நினைவை இழந்த  முஹம்மது பைசலை அரசு மருத்துவமனையில்  அனுமதித்து விட்டு காவல்துறை ஓட்டம் பிடித்துள்ளது.
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட முஹம்மது பைசல் சிகிச்சை எடுக்கு முன் மரணித்து விட்டார். இதனால் அவரின் குடும்பத்தினர் மிகப் பெரிய மன வேதனையில் ஆட்பட்டுள்ளனர்.
இது போன்று தமிழகத்தின் சாத்தான்குளத்தில் நடந்த போது ஒட்டு மொத்த சமூகமும் இதற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்திருந்தது. கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு உயர் நீதி மன்றமே அந்த பிரச்சினையை கையிலெடுத்தது.
அதற்கு பிறகுதான் பாதிக்கப்ப்ட்டவர்களுக்கு நீதியும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் கிடைத்தது. அது போல் அலகாபாத் உயர் நீதிமன்றம் தானே முன்வந்து காட்டு தர்பார் ஆட்சி செய்யும்  உத்திர பிரதேச யோகி அரசுக்கு எதிராக  இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.
கொரோனா பரவல் விஷயத்தில் உத்தரபிரதேசத்தின் யோகி அரசு மிகவும் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உரிய நேரத் தலையீடு ஒட்டு மொத்த இந்தியாவின் வரவேற்பை பெற்றது. அந்த முன்மாதிரியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இதில் தாமாக முன்வந்து இந்த வழக்கை  விசாரணை நடத்த வேண்டும்.   .
மத துவேச கருத்துக்களை விதைப்பதை மட்டுமே செய்து மக்கள் நலனில் அக்கரையில்லாமல் அலட்சியமாக உபி  அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
உபி காவல்துறையும் மத விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சிறுபான்மை மக்களுக்கு காவல் அரணாக  இருக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அவர்களுக்கு எதிராக இருக்கும் போது அலகாபாத் நீதிமன்றம் தானாக முன்வந்து இதை எடுத்தால் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய நிவாரணமும், ஆறுதலும் கிடைக்கும்.
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதி மன்றத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
  

The massacre against Muslims continues under Wild Darbar of Notorious Yogi ruling Uttar Pradesh state
Yogi government brutally  beaten to death an Islamic youth named Muhammad Faisal in Uttar Pradesh
TNTJ strongly condemned

कुख्यात योगी शासक उत्तर प्रदेश राज्य के जंगली दरबार के तहत मुसलमानों के खिलाफ नरसंहार जारी है।
उत्तर परदेश में योगी सरकार ने मुहम्मद फैसल नाम के एक इस्लामिक युवक को बेरहमी से तब तक पीटा जब तक वह मर नहीं गया.
तमिलनाडु तौहीद जमात की कड़ी निंदा