தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் (ஹிஜ்ரி 1442) ஆரம்பம் – 2021

தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் பற்றிய அறிவிப்பு.

பிறைதேட வேண்டிய நாளான இன்று 10.07.2021 சனிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து இன்ஷா அல்லாஹ் வரும் 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை மஃரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும்

வரும் 20.07.2021 செவ்வாய்க்கிழமை அரஃபா நோன்பு மற்றும் 21.07.2021 புதன்கிழமை ஹஜ்பெருநாள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.