சிவகாசி நகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தல்

சிவகாசி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முஸ்லிம் நடுத்தெருவிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் குழாய் பதிப்பு பணி நிறைவடைந்த நிலையில் தற்போது சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.

சாலையை தோண்டாமல் இந்த கற்கள் பதிக்கப்பட்டால் ஏற்கனவே இருந்த சாலையின் உயரம் அதிகரித்து பெரும்பாலான வீடுகளில் உள்ளே மழைநீரும், கழிவுநீரும் செல்லும் நிலை ஏற்படும். இந்நிலை ஏற்படாமல் இருக்க ஏற்கனவே இருக்கின்ற சாலையை சற்று தோண்டி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகாசி நகரக்கிளையை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகாசி நகராட்சி நிர்வாகத்திற்கு TNTJ விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் இன்று(10.09.2020) மனுக் கொடுக்கப்பட்டது.

சிவகாசி நகராட்சி நிர்வாகம் இக்கோரிக்கையை ஏற்று பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு சாலையை அமைத்து தருவதாக தெரிவித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!