“நன்மையை நாடி மதீனா பயணம்” நிகழ்ச்சி

madina-travelஜமாஅத், ஜித்தா மண்டல சரஃபியா கிளையின் சார்பில், ஜித்தா மண்டலதலைவர் சகோ.சலிம் சேட் அவர்களின் தலைமையில், சரஃபியா கிளையின் பொறுப்பு தலைவரும், ஜித்தா மண்டல துணைத்தலைவருமான சகோ. செய்யது முஸ்தபா அவர்களின் ஏற்பாட்டில், மதீனா மாநகரில் உள்ள நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு நன்மையை நாடி பயணம் அழைத்துச் செல்லப்பட்டது. சகோ. பிர்ணாஸ் மௌலவி அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒவ்வொரு இடங்களிலும் நின்று, அவ்விடங்களில் நடைபெற்ற சம்பவங்களை விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.