ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வ அங்கீகாரம் – அறிக்கை

ஓரினச் சேர்க்கைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அங்கீகாரம் சமூக சீரழிவிற்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் மனித இன அழிவிற்கும் வழிவகுக்கும்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை

இந்திய தண்டனைச் சட்டம் 377வது பிரிவு ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்று கூறுகிறது. இந்த சட்டத்தை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து 377 சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (06.09.2018) தீர்ப்பு வழங்கியுள்ளது.

கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது.

எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். ஓரினச் சேர்க்கை என்பது சட்டவிரோதமானது அல்ல. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அது நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அமைய வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாட்டு மக்களை முற்றிலும் அழித்து நாசமாக்கும் வகையில் அமைந்துள்ளது.

மனித இனத்தில் ஆண் பெண் என இரு பாலினம் படைக்கப்பட்டிருப்பதே உடல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன என்பதாகும். இதுவே இயற்கை மரபாகும்.

விஞ்ஞான ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் ஆண் பெண் என்ற இரு பாலினத்தை உள்ளடக்கிய குடும்ப உறவு முறையே சிறந்ததும் ஆரோக்கியமானதும் ஆகும்.

ஓரினச் சேர்க்கை என்பது இயற்கை மரபை மீறிய நாகரீகமற்ற அருவருக்கத்தக்க செயலாகும். இதனால் மனித இனத்திற்கு ஏற்படும் கேடுகள் ஏராளம். நோயற்று வாழ விரும்பும் மனிதனுக்கு இந்த கேடுகெட்ட செயலால் உடல் ரீதியாக பல நோய்கள் ஏற்படுகிறது.

கணவன் மனைவி குழந்தைகள் குடும்பம் என்ற கட்டமைப்பு சிதைவதுடன் ஒரு கட்டத்தில் மனித இனமே அழியும் நிலை ஏற்பட்டு எதிர்கால சந்ததிகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

மேற்கத்திய நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதியளித்த காரணத்தினால்தான் அங்கு குடும்ப அமைப்புகள் சீரழிந்து, ஒழுக்கக் கேடுகள் பெருகி கிடப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக அனுமதிப்பதன் மூலம் கலாச்சாரம் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பில் முன்னோடியாக திகழும் நமது நாட்டிற்கும் அதே நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.

எனவே சமூக சீரழிவிற்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் மனித இன அழிவிற்கும் வித்திடும் ஓரினச் சேர்க்கை முறைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் 377வது பிரிவை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இ.முஹம்மது
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ஊடகத் தொடர்புக்கு:9789030302