ஃபித்ரா, பெருநாள் தொழுகை நோட்டீஸ்

ஃபித்ரா மற்றும் நபிவழிப்படி பெருநாள் தொழுகை நோட்டீஸ் மாதிரியை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கானும் லிங்கை கிளிக் செய்யவும்.

 

TEXT வடிவில்…

நபி வழிப்படி திடலில் பெருநாள் தொழுகை
இன்ஷா அல்லாஹ்
நேரம் :
இடம் :
நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைக்கு முஸல்லா எனும் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (புகாரி 956, முஸ்லிம் 1612)
நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள்களிலும் மாதவிடாய் பெண்களையும், கன்னிபெண்களையும் தொழும் திடலுக்கு வருமாறும் மாதவிடாய் பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் துஆ மற்றும் திக்ருகளில் ஈடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். (புகாரி 351, முஸ்லிம் 1616)
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
அன்புடன் அழைக்கிறது…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தினமும் இரவு 9 மணி முதல் 9:30 மணி வரை
தமிழன் டி.வி.யில் TNTJ வழங்கும்
இஸ்லாமிய நிகழ்ச்சிகளை காணத்தவறாதீர்கள்
உணர்வு வார இதழ், ஏகத்துவம் மாத இதழ் படியுங்கள்! பரப்புங்கள்!

நோன்பு பெருநாள் தர்மம் (ஃபித்ரா)
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நோன்பு பெருநாள் தர்மத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் அனைவரின் சார்பாகவும் இந்த தர்மத்தை வழங்குவது கட்டாயக் கடமையாகும். ஒவ்வொரு நபரின் சார்பாகவும் ஒரு ஸாவு (சுமார் இரண்டரைக் கிலோ அரிசி அல்லது அதற்குரிய விலை) வழங்க வேண்டும்.
ஃபித்ராவை திரட்டி வசூலிக்கும் பொறுப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நியமணம் செய்திருந்தார்கள். (பார்க்க புகாரி 1503, 1511, 3275) எனவே நம்மைத் தேடி வரும் ஏழைகளுக்கு தனிப்பட்ட முறையில் வழங்காமல் கூட்டாக திரட்டி விநியோகம் செய்வதுதான் நபி வழி ஆகும்.
வசதியுள்ளவர்களிடமும், நடுத்தர வர்க்கத்தினரிடமும் நோன்பு பெருநாள் தர்மத்தை திரட்டி ஏழைகளுக்கு வழங்குவது தான் ஏழைகளுக்கு அதிகம் நன்மை பயப்பதாகும். ஒவ்வொருவரும் தனித்தனியாக விநியோகம் செய்யும்பொழுது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிடைக்கும் நிலையும், தேவையுடைய பலருக்கு கிடைக்காத நிலையும் ஏற்படும். ஒருவரே திரும்பத் திரும்பபெறும் நிலை ஏற்படும்.
கூட்டாக வசூலித்து ஏழைகளைத் தேடிச் சென்று விநியோகம் செய்வதால் அனைத்து ஏழைகளையும் பெருநாள் தர்ம்ம் சென்றடையும், தேவையான அளவுக்கும் அவர்களுக்கு கிடைக்கும்.
ஃபித்ராவை போலவே ஜகாத்தையும் வசதியுள்ளவர்களிடமிருந்து கூட்டாக வசூலித்து தகுதியான ஏழைகளுக்கு தகுந்த முறையில் விநியோகம் செய்கிறோம். எனவே உங்களுடைய ஃபித்ரா மற்றும் ஜகாத் தகுதியானவர்களை சென்றடைய எங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஃபித்ரா தொகை : ரூ.100 முதல் ரூ.130
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்