சட்டமன்ற தேர்தல் 2021

அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் – பூந்தமல்லி – 07.03.2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் குமணன்சாவடி சிக்னல் அருகே 07.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் EVM எந்திரமா தந்திரமா என்ற தலைப்பில் துணை பொதுச் செயலாளர் ஆர். அப்துல் கரீம் அவர்களும் மக்கள் யார் பக்கம்? என்ற தலைப்பில் TNTJ பேச்சாளர் ஆர். ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.


தமிழக வாழ்வுரிமை கட்சி சந்திப்பு – கடலூர் வடக்கு – 19/03/2021
19/03/2021 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடலூர் வடக்கு மாவட்ட தலைமைக்கு பண்ரூட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்  தி. வேல்முருகன் அவர்கள் வருகைத் தந்து ஆதரவு கோரினார் அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

திமுக சந்திப்பு – திருச்சி – 17/03/2021
17-03-2021 புதன்கிழமை காலை 11:30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்ட நிர்வாகிகளை திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை செயலாளர் மற்றும் வேட்பாளருமான திரு. K.N நேரு அவர்கள் TNTJ திருச்சி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்கள்.
   

மமக சந்திப்பு – மணப்பாறை – 17/03/2021
திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டனி சார்பாக மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் அப்துல் சமது அவர்கள் 17/03/2021 புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மணப்பாறை நகர கிளையின் நிர்வாகிகள் & உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

காங்கிரஸ் சந்திப்பு – அறந்தாங்கி – 17/03/2021
மதச்சார்பற்ற கூட்டணியின் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் சகோதரர் ராமச்சந்திரன் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டைப்பட்டினம் தவ்ஹீத் பள்ளிவாசலில் கிளை நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

திமுக சந்திப்பு – நெல்லை – 17/03/2021
பாளை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து  சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கோரினார்!

திமுக சந்திப்பு – ஆவடி – 17/03/2021
ஆவடி சட்டமன்ற திமுக வேட்பாளர் சகோ. சா.மு. நாசர் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆவடி கிளை நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.

காங்கிரஸ் சந்திப்பு – ஈரோடு – 19/03/2021
19/3/21 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட தலைமையகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்க்கோவன் அவர்களும், கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டும் திருமகன் ஈவெரா அவர்களுக்கு ஆதரவு கோரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தனர்.

திமுக சந்திப்பு – கம்பம் – 19/03/2021
கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கம்பம் N.ராமகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள்தேனி மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

திமுக சந்திப்பு – காரைக்கால் – 19/03/2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை
திமுக முன்னால் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான காரைக்கால் தெற்கு தொகுதி வேட்பாளர் AMH.நாஜிம் நானா அவர்கள் சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை *முன்னிட்டு ஆதரவு கோரினார்

திமுக சந்திப்பு – இராமநாதபுரம் – 19/03/2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளை திராவிட முன்னேற்ற கழகம் இராமநாதபுரம் மாவட்ட தொகுதி வேட்பாளர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்  சந்தித்து ஆதரவு கேட்டனர்.

மமக சந்திப்பு – இராமநாதபுரம் – 20/03/2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை மர்கஸில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை பாபநாசம் சட்டமன்ற தொகுதி (திமுக கூட்டணி) மமக  வேட்பாளர் ஜாவாஹிருல்லா அவர்கள் சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆதரவு கோரினார்கள்.

திமுக சந்திப்பு – கோவை – 20/03/2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்ட தலைமையகத்தில் மாவட்ட நிர்வாகிகளை திமுக சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் நா.கார்த்திக் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சந்தித்து ஆதரவு கோரினர்.

திமுக சந்திப்பு – கோவை – 20/03/2021
திராவிட முன்னேற்ற கழகத்தின் மதுரை தெற்கு தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரும், மதிமுகவின் மாவட்ட செயலாளருமான சகோதரர் பூமிநாதன் அவர்கள் 23-03-2021 அன்று இரவு 8:00 மணியளவில் TNTJ மதுரை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தனர்.

திமுக சந்திப்பு – பழனி – 2303/2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பழனி நகர அலுவலகத்திற்கு பழனி நகர திமுக எம்எல்ஏ IP செந்தில்குமார் நகராட்சி சேர்மன் வேலுமணி , உமா மகேஸ்வரி மற்றும் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் வருகை தந்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சந்திப்பு – திண்டுக்கல் – 25/03/2021
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு என் பாண்டி அவர்கள் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திண்டுக்கல் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு கேட்டனர்