லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை மாட்டிவிட புதிய மொபைல் மென்பொருள் – CVC யின் புதிய சேவை ”VIGEYE”

இலஞ்ச ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று (9-12-2010) மத்திய லஞ்ச ஒழிப்புதுறை ஆணையம் (Central Vigilance commission) புதுவிதமான VIGEYE என்ற சேவையை ஆரம்பம் செய்துள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் எங்கிருந்து கொண்டும் மொபைல் மூலம் லஞ்ச வாங்கும் அதிகாரிகள் பற்றி வீடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் எளிதில் புகார் அளிக்கலாம்.

அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போதோ அல்லது அது பற்றி பேசும் போது மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோவையும் புகைப்படத்தையும் உடனுக்குடன் மத்திய லஞ்ச ஒழிப்புதுறை ஆணையதிற்கு அனுப்ப (அப்லோடு செய்ய) ஒரு மொபைல் மென்பொருளை CVC உருவாக்கியுள்ளது.

அதை நமது மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும். அதன் மூலம் நமது மொபைலிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வீடியோவையும் மத்திய லஞ்ச ஒழிப்புதுறை ஆணையத்திற்கு எளிதில் அனுப்பி விடலாம்.

இதற்கு மொபைல் போனில் GPRS அல்லது இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும்.

தாங்கள் அனுப்பிய புகார் உடனடியாக ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட்டு அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரத்தையும் நீங்கள் ஆன்லைனிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

CVC (Central Vigilance commission) இந்த சேவைக்கென உருவாக்கிய இணையதளத்தில் இதற்குரிய மொபைல் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://vigeye.com/vigeye/register_mobile_init.php

மேற்கண்ட இணைப்பில் சென்று உங்கள் மொபைல் என்னை பதிவு செய்து கொண்டால் போதும் உங்கள் மொபைலுக்கு உடனடியாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்படும். அதில் ஐடி, பாஸ்வேர்ட் மற்றும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய மென்பொருளின் இணைப்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

இந்த சேவை பற்றி முன்னால் மத்திய லஞ்ச ஒழிப்புதுறை ஆணையர் விடல் அவர்கள், ”இந்த சேவை வெறுமென புகார்களை பெறும் புகார் பெட்டியாக இருக்கக் கூடாது. பெறப்பட்ட புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.

அபு அஜீபா