கொரோனா மரணம் ஜனாஸா நல்லடக்கம் – செங்கோட்டை கிழக்கு கிளை, தென்காசி மாவட்டம்

செங்கோட்டை கிழக்கு கிளை பகுதியை சார்ந்த சகோதரர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை சோதனை செய்ததில் கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று (10-09-20) அதிகாலை 12:30 மணியளவில் உயிரிழந்தார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

மரணித்த அந்த சகோதரரின் உறவினர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செங்கோட்டை கிழக்கு கிளை நிர்வாகத்தை அணுகி மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

மாவட்ட நிர்வாக ஆலோசனையின் பெயரில் செங்கோட்டை கிழக்கு கிளை தன்னார்வ தொண்டர்கள் மரணித்த சகோதரரின் உடலை பெற்றுக்கொண்டு , சுலைமான் நபி பள்ளி மையவாடியில் சுகாதாரத் துறையின் முழு வழிகாட்டுதல் அடிப்படையில் சகோதரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.