குடியுரிமை சட்ட திருத்த மசோதா- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு தரும் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் எச்சரிக்கை!!

இன்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையே குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.

கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜக 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு கடந்த முறை பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மட்டும் புறக்கணிகப்படும் வகையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாக கருதப்படுவர். ஆனால் இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்துள்ளார். அப்போது அமித்ஷா ‘‘இந்த மசோதா சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரானது அல்ல’’ எனக் கூறியுள்ளார்.
ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பல கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கின்றனர்.

மணிப்பூர், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மசோதாவை நாட்டின் மீது சிறிதும் அக்கறை இல்லாத அமித்ஷா தாக்கல் செய்து இருக்கிறார்.

இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

கண்களுக்கு புலப்படாமல் முஸ்லிம்களை குறி வைத்து தாக்கப்படும் மசோதா என்று சிவசேனா வர்ணித்துள்ள இந்த மசோதாவை அதிமுக ஆதரிப்பது என்பது முஸ்லிம்களின் நெஞ்சில் குத்துவதாக அமைந்துள்ளது. அதிமுக வின் இந்த ஆதரவு முஸ்லிம்களை விட்டு அது தூரம் செல்வதாகவே அமைகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் வைத்த கூட்டினால் முஸ்லிம்களின் ஓட்டுக்களை இழந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தை அதிமுக நினைத்து பார்க்க வேண்டும். அடுத்து உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு முஸ்லிம்களின் மீது ஏவப்படும் இந்த அநீதியை அதிமுக எதிர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்பார்பாக உள்ளது.

அஸ்ஸாமில் நடந்த தேசிய குடியுரிமை கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் தான் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.

மத்திய அரசு அஸ்ஸாமில் தேசிய குடியுரிமைக்காக 1500 கோடி செலவு செய்தது. இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. அதில் 19 இலட்சம் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டார்கள். இதில் 12 இலட்சம் மக்கள் முஸ்லிம் அல்லாதவர்கள்.
இதில் எந்த பாடமும் படிக்காமல் மத்திய அரசு உள்ளது.

இந்திய அரசியல் சாசனம் ஆர்ட்டிக்கல் 14 மற்றும் 21 மத அடிப்படையில் குடிமக்களை பிரித்தாளாக் கூடாது என்று கூறியுள்ளது. இந்த் அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் ஆட்சியாளர்கள் இருப்பது வேதனை அளிக்கிறது.

இதை இந்தியா முழுக்க கொண்டு வரும் நிலையை கருத்தில் வைத்து தான் பாசிச பாஜக அதிக முனைப்பு காட்டுகின்றது. இதை ஆதரித்தால் அதிமுக விற்கு மிகப்பெரும் அரசியல் பின்னடைவு தமிழகத்தில் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்.

இப்படிக்கு,
இ.முஹம்மது ,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

 

Tamilnadu Thowheed Jamaath strictly warns the political parties, which supports the Citizenship Amendment Bill

Amid bitter opposition, Home Minister Amit Shah has filed the Citizenship Amendment Bill in Parliament today.

During their last tenure in power, BJP modified the Citizenship Act of 1955 and tried to amend the bill. Since BJP did not have a sufficient majority in Rajya Sabha during that tenure, the bill went unfulfilled.

The Citizenship Bill has been amended to grant Indian citizenship to Hindus, Christians, Sikhs, Parsis, Jains and Buddhists, who are refugees without documents, coming from countries such as Pakistan, Afghanistan, and Bangladesh.
This legal amendment clearly boycotts Muslims.

People who arrived before December 31, 2014, are considered eligible for citizenship. Opposition parties including Congress have accused that in this Bill, the Central Government is dividing the people religiously, to grant citizenship.

Following this, the Central Government is taking steps to bring back the Citizenship Amendment Bill. In this context, Home Minister Amit Shah has introduced the Citizenship Amendment Bill in Parliament today. Amit Shah, said, “The bill is not targeted against the minority community”. But Congress Lok Sabha Party leader Adhir Ranjan Chowdhury vehemently opposed the bill. Many parties vehemently oppose the bill.

Fierce protests are taking place in Manipur, Assam and Arunachal Pradesh. In spite of all these protests, Amit Shah with little concern for the country has filed the bill.

AIADMK has expressed support for the bill.

Without making it obvious, Shiv Sena described, “it’s a clearly a bill targeted against Muslims”. AIADMK’s support for the bill, signifies the party’s moving far away from the Muslim community, and an indication of stabbing Muslims in their chest.

During the last Parliamentary election, AIADMK tasted it’s the biggest defeat just because of its alliance with BJP. While the local elections and the assembly elections are approaching, Muslims expect the AIADMK to recognize the injustice inflicted on Muslims and oppose the bill.

During the recent National Citizenship Survey in Assam, Muslims were the worst affected. Tamilnadu Thowheed Jamaath announced ‘Muslims Rights Protection Protest’.

The central government spent 1500 crores on the National Citizenship survey in Assam, which finally went useless. Resulted, around 19 lakh people were made as refugees.
Of this, 12 lakh people are non-Muslim. The central government is still adamant to learn lessons.

As per Article-14 and Article-21 of the Constitution of India, the government should not try to divide the Citizens of the nation. It is sad and painful to have rulers, without even this basic knowledge.

By this strategy, the Fascist BJP government is planning to divide the citizens of the nation, throughout the entire country. If AIADMK continues to support these fascist based strategies, we caution that there will be a major political setback for the AIADMK.

Regards,
E.Muhammad ,
State General Secratary,
Tamilnadu Thowheed Jamaath.

 

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையே குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

அதற்கு அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது.

அடுத்து மாநிலங்களவையில் இது சம்பந்தமாக வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கடந்த முறை ஆட்சியில் இருந்த பாசிச பாஜக 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் கூடுதல் திருத்தம் செய்து முன்னரே மசோதாவை கொண்டு வந்தனர்.

ஆனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு கடந்த முறை பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது மீண்டும் இந்த சட்டத்தை கொண்டு வர பாசிச பாஜக துடித்து கொண்டு இருக்கிறது.

மத ரீதியாக இந்தியர்களை பிளவு படுத்தும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து…

உடனடியாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மாநில செயலாளர் முஜிப் (7550277116) அவர்களை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
இ.முஹம்மது ,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

பத்திரிகையாளர் சந்திப்பு

நாள் : 10/12/2019

நேரம் : மாலை 4 மணி

இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் சேப்பாக்கம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமிய சமுதாயத்தை வஞ்சிக்கும் விதமாக பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது

பாஜகவின் இந்த செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் இந்த சட்டத்தை ஆதரிக்கும் அதிமுக அரசு சிறுபாண்மை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்றும் இந்த சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக ஆதரிக்க கூடாது என்றும்

இன்று 10/12/2019 மாநில துனண பொதுச்செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்