மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்

 

விகடன் செய்தி : 

https://www.vikatan.com/news/tamilnadu/people-are-interested-to-close-the-abandoned-bore-well

கலைஞர் செய்திகள் : 

https://www.kalaignarseithigal.com/tamilnadu/2019/10/29/tamil-nadu-thowheed-jamath-closing-the-open-borewells-in-tamilnadu

நியூஸ்7 தமிழ் TWITTER :

நியூஸ்7 தமிழ் FACEBOOK :

 

26-10-2019

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சிக்கிக் கொண்ட செய்தி நம்மை கவலையடயச் செய்கிறது. பிஞ்சுக் குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட அனைவரும் இறைவனை பிரார்த்திக்கும்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

25.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதலே சிறுவனை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத்துறை, காவல்துறை, மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவக் குழு உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவன் சுஜித்தின் நிலையறிந்து தமிழக மக்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். மீட்கும் முயற்சியில் அரசுடன், அனைத்து தரப்பு மக்களும் இனைந்து பங்களித்து வருகின்றனர். இரவு பகல் பாராமல் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.

தண்ணீர்த் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பதை தடுப்பதற்காக 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்தக் கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனைத் தோண்டிய ஒப்பந்ததாரரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் சிக்கிக் கொள்வது தமிழகத்தில் அடிக்கடி நிகழும் சம்பவமாக மாறிவிட்டது. உபயோகப் படுத்தப்படாமல் உள்ள கிணறுகளை மூடுவதற்குண்டான விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு வெளிநாடுகளில் உள்ளது போன்ற தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவற் குண்டான ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்