ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய இரயில்வே அதிகாரிகள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

ஆட்டுக்கறியை நாய்க்கறி ஆக்கிய இரயில்வே அதிகாரிகள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

இராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு இரயிலில் வந்த ஆட்டுக்கறியை நாய்க்கறி இறக்குமதி செய்யப்படுவதாக கூறி இரயில் நிலைய அதிகாரிகள் இரண்டாயிரம் கிலோ இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த செய்தி இரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக திட்டமிட்டு பரப்பப்பட்டது.

இரண்டாயிரம் கிலோ கறிகிடைக்கும் அளவுக்கு நாய்களை பிடித்து அறுக்க சாத்தியம் உள்ளதா? என்று கூட யோசிக்காமால் நாய்க்கறி என்று செய்தியை அதிகாரிகள் பரப்பியிருக்கின்றனர். இது சங்கபரிவாரங்களின் திட்டமிட்ட் சதியாகும்.

சீனாவைப்போல பண்ணை வைத்து நாயை வளர்க்க வேண்டும். அதுபோன்ற பண்ணைகள் இராஜஸ்தானில் இருகின்றனவா?

பண்ணை வைத்து நாயிடம் கடிவாங்கி நாய்வளர்ப்பதைவிட ஆடுவளர்ப்பது செலவு குறைந்ததும் , பாதுகாப்பானதும் ஆகும் என்று மூளை மழுங்கிய இந்த கூட்டம் கொஞ்ச கூட சிந்தனை செய்யவில்லை.

எப்படி யோசித்தாலும் நாய்க்கறியை விற்பதால் வியாபாரி இலாபம் அடைய வாய்ப்பில்லை என்பது கொஞ்சம் விபரமுள்ளவர்களுக்கும் புரியும்.

காந்தியை சுட்டது இஸ்மாயில்தான் என்று வதந்தியை பரப்பி அதன் மூலம் கலவரத்தை உண்டாக்கி முஸ்லிம்களை அழிக்க நினைத்தது போல ஆட்டை நாயாக்கி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்க சில அதிகாரிகள் வேலை செய்துள்ளனர்.

வழக்கம் போல் திட்டமிட்டு சங்கபரிவாரங்கள் சமூகவலைத்தளங்களில், ஊடகங்களில் இந்த செய்தியை திட்டமிட்டு பரப்புகின்றனர்.

போலியாக ஏமாற்றி விற்பனை செய்வதையும், அவர்களுக்கு உரிய தண்டனை அளிப்பதையும் ஜமாஅத் வரவேற்கும். ஆனால் இங்கு ஆட்டுக்கறி விற்பனையையும் பிரியாணி வியாபாரத்தையும் திட்டமிட்டு தடுக்கும் விதமாக நன்கு திட்டமிடப்பட்டு சதி நடந்துள்ளது தெளிவாகிறது.

வதந்தி பரவிய பின்னால் “நாங்கள் நாய்கறி என்று சொல்லவில்லை” என்று சில இரயில்வே அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்கு தற்போது பேட்டி அளித்து வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் ஆட்டை நாயாக்கிய கருப்பு ஆடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.

மேலும் சதி செய்த அதிகாரிகள் , அதை திட்டமிட்டு பரப்பிய சமூக விரோதிகள் யார் என்பதை முறையான விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது எக்மோரில் பிடிபட்ட இறைச்சியை “நாய்க்கறி என்று நாங்கள் சொல்லவில்லை” என்று அதிகாரிகள் சொல்லும் உண்மையை உலகறிய செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் ஊடகங்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உள்ளது என்பதை உணர்ந்து செயலாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு.

இ.முஹம்மது
பொதுச் செயலாளர்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்

ஊடகப் பிரிவு – +91 97890 30302