கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை:-

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை:-

காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கஜாபுயல் சூறாவளியாக சுழன்று அடித்தது. இதில் இலட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தது,பல ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் தோப்புக்கள் சின்னாபின்னமாகியது.

வீடுகள் சூறைக்காற்றில் பறந்ததில் ஆயிரக்கனக்கான ஏழை மக்கள் வாழவழியின்றி தெருவில் நிற்கின்றனர் ,மின்சாரம் தடைபட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டதால் தினக்கூலிகள் பிழைப்புக்கு வழியில்லாமல் பட்டினியால் வாடுகின்றனர்

குடிக்க நீரின்றி, இருக்க வீடின்றி, உண்ண உணவின்றி சொந்த நாட்டில் அகதிகளாக விரக்தியுடன் தமிழக மக்கள் அல்லல்படுகின்றனர். இயன்ற உதவிகளை மறு சீரமைப்பை தமிழக அரசும் தனியார்களும் செய்தாலும் அவை யானைப்பசிக்கு சோளப்பொறிதான்.

தமிழக மக்கள் தங்களின் 20 வருட உழைப்பை இழந்து நிற்கின்றனர் எனவே கோடிக்கணக்கான பொருளாதார இழப்பு ஏற்பட்டு , உள்கட்டமைப்பு சிதைந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால். தமிழக கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரணத்திற்கான நிதியை உடனே ஒதுக்க வேண்டவேண்டும்.

மேலும் புயல் பாதுக்காப்பு மற்றும் மறுவாழ்வு மையமும் உடனே அமைக்க வேண்டும்.

என்றும் மத்திய மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு.
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்