பாஜக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

பாஜக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

இந்தியா பலதரப்பட்ட இன, மத, மொழி மற்றும் கலாச்சாரத்தை உடைய மக்கள் கலந்து வாழும் நாடு எனவேதான் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அடிப்படையை தகர்தெறிந்து காவி அரசை உண்டாக்குவதில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் இருந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

காவி வெறி முற்றிய நிலையில் தற்போது இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலையை செய்ய துவங்கி விட்டது.

அதன் ஒரு கட்டமாக ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா என்று உ.பி அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

இதேப்போல உ.பியில் உள்ள அலகாபாத் நகருக்கு ‘பிரயாக் ராஜ்’ என்று பெயர் மாற்றம் செய்ய ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. , மேலும் குஜராத்தின் அகமதாபாத்தை ‘கர்ணாவதி’ என்று மாற்ற குஜராத் அரசு திட்டமிடுகிறது.

பம்பாய் என்பது மும்பையாக கல்கத்தா என்பது கொல்கத்தாவாக இந்தியாவில் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றுவது புதிய நடைமுறையல்ல. ஆனால் அவை மத அடிப்படையில் மாற்ற பட்டதல்ல ஆனால் ஃபைசாபாத்தை அயோத்தியாவாக மாற்றியிருப்பது இஸ்லாமிய இன அழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

முகலாயர் காலத்திலிருந்தே அலகாபாத் நகரம் நாட்டின் பரந்துபட்ட கலாச்சாரச் சின்னமாக மதிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டியே தீர வேண்டும் என்ற கோரிக்கை காவிகள் முன்வைக்கும் வேளையில், மாநில அரசின் இந்தப் பெயர் மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அயோத்தி பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும்போதே, ராமர் கோயில் பிரச்சினையில் மக்களை உசுப்பேற்றும் செயல்கள் உச்சம்பெறுகின்றன.

எனவே இஸ்லாமியர்களின் இன அடையாளங்களை துடைத்தெறிந்து , இந்தியாவின் பன்முகத்தன்மையை குழிதோண்டி புதைத்து, இந்துத்துவ காவி பயங்கரவாத அரசை கட்டமைக்கும் பா.ஜ.க உ.பி, குஜராத் மற்றும் மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது

ஊடக தொடர்புக்கு : 97890 30302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்