பீகாரில் முதியவர் ஜைனுல் அன்சாரி கழுத்தறுத்து எரித்து கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

பீகாரில் முதியவர் ஜைனுல் அன்சாரி கழுத்தறுத்து எரித்து கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

பீகார் மாநிலம் சீதாமார்ஹியில் கடந்த மாதம் 20ஆம் தேதி துர்கா பூஜை என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்த காவிகள் காவல்துறை அனுமதி மறுத்த முஸ்லிம் பகுதிக்குள் ஊர்வலத்தை கொண்டு சென்றனர்.

காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தை முஸ்லிம் முதியவர் ஜைனுல் அன்சாரி மீது காட்டியுள்ளதுவன்முறை கும்பல்.

அந்த பகுதியில் தனது மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 80 வயது முதியவர் ஜைனுல் அன்சாரியை வழிமறித்த காவி கும்பல் அவரை மிகக் கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்து பொதுவெளியிலேயே காட்டுமிராண்டி தனமாக எரித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த பயங்கரவாத செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த செயலை வெளியுலகிற்கு தெரியாமல் மூடி மறைக்க முயன்ற காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குறியது.

முதியவர் ஜைனுல் அன்சாரி அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த காட்சி, வன்முறை கும்பல் அவரை தூக்கி சென்ற காட்சி, அவரை தீயிட்டு கொளுத்திய கோர காட்சிகளும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி நாட்டையே உலுக்கி வருகிறது, இந்த சம்பவம் இந்திய மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியில் மோடி பொறுப்பேற்ற பின்னர் தான் மனிதர்கள் அடித்து கொல்லப்படுவது அதிகரித்திருக்கிறது.

உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இத்தகைய வன்முறையாளர்களை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது.

இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடராமலிருக்க அரசும் அதிகார வர்க்கமும் வாய் மூடி வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மக்களே சட்டத்தை கையிலெடுக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

மக்களை பாதுகாக்கவே அரசு என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த காட்டுமிராண்டி செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஊடக தொடர்புக்கு : 9789030302

இப்படிக்கு,
இ. முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்