பள்ளிக் கூடங்களில் யோகாவைத் திணிக்காதீர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

பள்ளிக் கூடங்களில் யோகாவைத் திணிக்காதீர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

பள்ளிக்கூடங்களில் வாரம் ஒருமுறை யோகா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் மதம் சார்ந்த எந்த சடங்குகளையும் திணிக்கக் கூடாது என்ற நடைமுறைகள் இருக்கும் நிலையில் யோகா என்னும் மதச்சடங்கு சார்ந்த ஒரு விடயத்தை மாணவர்களின் மத்தியில் திணிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

தமிழகத்தில் யோகாவைத் திணிப்பதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

முஸ்லிம்கள் தொழுகை செய்யும் முறையும் நல்ல யோகா பயிற்சி முறையாகும் பள்ளிகூடத்தில் படிக்கும் மாணவர்கள் அதை கடைபிடிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் சொல்வாரா.

யோகா செய்வதில் சூரிய வணக்கம் முதன்மை பெறுகின்றது. பள்ளிகளில் யோகாவை முன்னிலைப் படுத்துத்தி காவி சிந்தனையை புகுத்துவது தவறான தாகும்.

அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் உடற்கல்வித்துறையை மேம்படுத்தி மாணவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளை ஊக்கப்படுத்தினாலே போதுமானது.

நாட்டின் ஒருமைப்பாட்டையும் மதச்சார்பின்னையையும் காக்க வேண்டிய தமிழக அரசு யோகா என்னும் பெயரில் காவிகலாச்சாரத்தினை தமிழகத்திற்குள் புகுத்தி அதன்மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து விட வேண்டாம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவுறுத்துகின்றது. யோகா-வை பள்ளி மாணவர்களிடம் திணிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்