குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

குமுதம் ரிப்போட்டர் பத்திரிகையின் சிவகாசி செய்தியாளர் மீது வன்முறைக் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை குறித்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஜனநாயகத்தின் ஐந்து தூண்களில் ஒன்று பத்திரிகை. அதன் செய்தியாளர் மீது தாக்குதல் தொடுத்திருப்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

சொல்லப்பட்ட செய்திகளில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பினும் அதை முறையாக செய்தி ஆசிரியருக்கு தெரிவித்து மறுப்பு வெளியிடக்கோரி இருக்க வேண்டும்.

அதை விடுத்து வன்முறை தாக்குதல் நடத்தியிருப்பது சட்டத்திற்கு விடுக்கப்பட்ட சவால்

பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் தற்போது கூலிப்படைகள் நடமாடிக் கொண்டிருப்பதை காட்டுகிறது.

இச்சம்பவம் தமிழக மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர் குலைக்கும் இதுபோன்ற வன்முறை தாக்குதலை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது.

பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயல்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.