ஜார்கண்டில் அப்பாவி முஸ்லிம் அடித்துப் படுகொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

ஜார்கண்டில் அப்பாவி முஸ்லிம் அடித்துப் படுகொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள செரைகெலா கர்சவான் என்ற இடத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற 24 வயது இளைஞரை ஒரு கும்பல் மரத்தில் கட்டி வைத்து மிகவும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். “ஜெய் ஸ்ரீராம்” “ஜெய் ஹனுமான்” என்று சொல் என்று சொல்லிக் கொண்டே அந்த அப்பாவி இளைஞரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

எங்கள் பகுதியில் பைக் திருடியது நீதான் என்று சொல்லி அவரை மேலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஒருநாள் இரவு முழுவதும் மரத்தில் கட்டி வைத்து அடித்து விட்டு மறுநாள் காலையில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காவல்நிலையத்திலும் அவரை கடுமையாகத் தாக்கி விட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்திலும் கூட அவரைத் தாக்கியது குறித்தோ அவரை மருத்துவமனையில் அனுமதிக்கதது குறித்தோ கேள்வி எழுப்பாமல் அதன்பிறகு அவரை மருத்துமனையில் சேர்த்துள்ளனர்.

அன்சாரியைப் பார்க்க வேண்டும் என்று குடும்பத்தார் கேட்டுக் கொண்டும் கூட காவல்துறையினர் அவருக்கு அனுமதியளிக்கவில்லை. அதன்பிறகு ஒருவழியாக அன்சாரியை மீட்டு உயர்சிகிச்சைகாக மற்றொரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டு 5 நாட்கள் ஆனபிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்ததால் சிகிச்சை பலனின்றி தப்ரேஸ் அன்சாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தியாவில் சிறுபான்மையினர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த கோர சம்பவம் நடந்தேறியுள்ளது.

இந்த சம்பவங்களை பார்க்கும் போது நாம் சுதந்திர நாட்டில்தான் வாழ்கின்றோமா? என்ற எண்ணம் எழுகின்றது.

மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதத்தின் பெயரால் தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல!

கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் “சர்வதேச மதச்சுதந்திரம்” என்ற தலைப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை கடந்த ஜூன் 22 ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில்..,

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் அடித்தே கொலை செய்யப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் கொடூரங்களை ஒரு அந்நிய நாடு எடுத்துச் சொல்லி உலக அரங்கில் இந்தியர்கள் தலைகுணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிக்கையை உண்மைப்படுத்தும் அளவிற்கு இந்தியாவில் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக இருக்கின்றது. அத்தோடு கடந்த வாரம் டெல்லியில் மவுலவியை ஜெய்ஸ்ரீராம் சொல் என்று கூறி அவர் மீது காரை ஏற்றிய கொடூரமும் நிகழ்ந்துள்ளது.

இதுபோன்ற கொடூரத் தாக்குதல்கள் இனி நடப்பதை மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது. இந்தக் கொடும் தாக்குதலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றது.

ஊடகத் தொடர்புக்கு:9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 

Tamil Nadu Thowheed Jamaath strongly condemns Jharkhand Mob killing of a innocent Muslim.

In Jharkhand Saraikela Karsova -a muslim youth named Tabrez Ansari aged 24 was tied to a pole,brutally beaten and forced to chant “Jai Shri Ram” & “Jai Hanuman”.

He was accused of stealing a motorcycle, was tied to a pole, brutally beaten and forced to chant “Jai Shri Ram” and “Jai Hanuman”. He was handed over to the authorities only after he fell unconscious and died four days later in police custody.

He was also beaten up in police custody and then produced in court. Even the judisiory did not question his assault nor his hospitalization.

Despite appeals by his family the police did not arrange for proper treatment of Ansari, and they were not allowed to meet him, and he died long before he was taken to a hospital.

But sadly five days after the attack, he was taken to the hospital where Tabrez Ansari died miserably without treatment.
This shows the continuous assault faced by the minorities in this country.

These kinds of atrocities make us to ask ourselves are we living in independent country. Such attacks in the name of religion that too in an secular democratic country in noway acceptable!
Last week, the US State Department released its 2018 report entitled “International Religious Freedom” on 22 June. In that statement.

“The attacks on minorities in India are continuing to escalate and Muslims are being slaughtered in the name of cow protectors,” the statement said. The horror of India have been haunted by Indians on the world stage by a foreign country.

The incident is a testament to the fact that there are a series of incidents in India to substantiate that statement. Few weeks before one more incident in which a Maulavi, named Mumeen was forced to chant “Jai Shri Ram” later they ram the car over him to be noted this incident happened in nation capital Delhi.

It calls for the central government to immediately intervene and resolve such brutal attacks. The Tamil Nadu Thowheed Jamaath strongly condemns such attacks on minorities.

Media contact: 9789030302

Regards,
E.Mohamed
State General Secretary
Tamilnadu Thowheed Jamaath.

 

ജാർഖണ്ഡ് സംസ്ഥാനത്തിൽ
നിരപരാധിയായ ഒരു മുസ്ലീമിനെ കൊലപ്പെടുത്തിയതിനെ തമിഴ്‌നാട് തൗഹീദ് ജമാത്ത് ശക്തമായി അപലപിക്കുന്നു.

ജാർഖണ്ഡ് സംസ്ഥാനത്തിൽ ശരികേല കർസോവ എന്ന സ്ഥലത്തിൽ 24 വയസ്സുള്ള തബ്രെസ് അൻസാരി എന്ന മുസ്ലിം യുവാവിനെ ഒരു ധ്രുവത്തിൽ കെട്ടിയിട്ട് ക്രൂരമായി മർദ്ദിക്കുകയും “ജയ് ശ്രീ റാം”, “ജയ് ഹനുമാൻ” എന്നിവ ചൊല്ലാൻ നിർബന്ധിക്കുകയും ചെയ്തു.

മോട്ടോർ സൈക്കിൾ മോഷ്ടിച്ചുവെന്ന കുറ്റം ചുമത്തി, ധ്രുവത്തിൽ കെട്ടി, ക്രൂരമായി മർദ്ദിക്കുകയും “ജയ് ശ്രീ റാം”, “ജയ് ഹനുമാൻ” എന്നിവ ചൊല്ലാൻ നിർബന്ധിക്കുകയും ചെയ്തു. അബോധാവസ്ഥയിൽ കിടന്ന് നാല് ദിവസത്തിന് ശേഷം പോലീസ് കസ്റ്റഡിയിൽ മരിച്ച ശേഷമാണ് ഇയാളെ അധികൃതർക്ക് കൈമാറിയത്.

ഇയാളെ പോലീസ് കസ്റ്റഡിയിൽ മർദ്ദിക്കുകയും പിന്നീട് കോടതിയിൽ ഹാജരാക്കുകയും ചെയ്തു. ജുഡീഷ്യറി പോലും അയാളുടെ ആക്രമണത്തെയോ ആശുപത്രിയിൽ പ്രവേശിപ്പിക്കുന്നതിനെയോ ചോദ്യം ചെയ്തിട്ടില്ല.
അദ്ദേഹത്തിന്റെ വീട്ടുകാരുടെ അപ്പീൽ ഉണ്ടായിരുന്നിട്ടും അൻസാരിയെ ശരിയായ രീതിയിൽ ചികിത്സിക്കാൻ പോലീസ് ഒരുക്കവും ചെയ്തില്ല, അദ്ദേഹത്തെ കാണാൻ അവരെ അനുവദിച്ചില്ല, ആശുപത്രിയിലെത്തിക്കുന്നതിന് വളരെ മുമ്പുതന്നെ അദ്ദേഹം മരിച്ചു.

ആക്രമണത്തിന് അഞ്ച് ദിവസത്തിന് ശേഷം അദ്ദേഹത്തെ ആശുപത്രിയിലേക്ക് കൊണ്ടുപോയി. അവിടെ തബ്രെസ് അൻസാരി ചികിത്സയില്ലാതെ ദയനീയമായി മരിച്ചു.
ഈ രാജ്യത്തെ ന്യൂനപക്ഷങ്ങൾ തുടർച്ചയായി നേരിടുന്ന ആക്രമണം ഇത് കാണിക്കുന്നു.

ഇത്തരത്തിലുള്ള അതിക്രമങ്ങൾ നമ്മൾ സ്വതന്ത്ര രാജ്യത്താണ് താമസിക്കുന്നതെന്ന് സ്വയം ചോദിക്കാൻ നമ്മെ പ്രേരിപ്പിക്കുന്നു. മതത്തിന്റെ പേരിൽ ഇത്തരം ആക്രമണങ്ങൾ ഒരു മതേതര ജനാധിപത്യ രാജ്യത്ത് ഇപ്പോൾ സ്വീകാര്യമാണ്!
കഴിഞ്ഞയാഴ്ച യുഎസ് സ്റ്റേറ്റ് ഡിപ്പാർട്ട്മെന്റ് 2018 ലെ “അന്താരാഷ്ട്ര മതസ്വാതന്ത്ര്യം” എന്ന റിപ്പോർട്ട് ജൂൺ 22 ന് പുറത്തിറക്കി. ആ പ്രസ്താവനയിൽ.

ഇന്ത്യയിൽ ന്യൂനപക്ഷങ്ങൾക്കെതിരായ ആക്രമണങ്ങൾ വർദ്ധിച്ചുകൊണ്ടിരിക്കുകയാണെന്നും പശു സംരക്ഷകരുടെ പേരിൽ മുസ്ലീങ്ങളെ അറുക്കുകയാണെന്നും പ്രസ്താവനയിൽ പറയുന്നു. ഇന്ത്യയുടെ ഭീകരതയെ ലോക വേദിയിൽ ഒരു വിദേശ രാജ്യം വേട്ടയാടി.

ആ പ്രസ്താവന ശരിവയ്ക്കുന്നതിനായി നിരവധി സംഭവങ്ങൾ ഇന്ത്യയിലുണ്ടെന്നതിന്റെ തെളിവാണ് സംഭവം. ഡൽഹിയിൽ മൗലവിയാ “ജയ് ശ്രീ റാം” എന്ന് ചൊല്ലാൻ നിർബന്ധിതനായ ഒരു സംഭവത്തിന് ഏതാനും ആഴ്ചകൾക്കുമുമ്പ്, അവർ തലസ്ഥാനമായ ദില്ലിയിൽ ഈ സംഭവം നടന്നതായി ശ്രദ്ധയിൽ പെടുന്നു.

ഇത്തരം ക്രൂരമായ ആക്രമണങ്ങൾ ഉടൻ തന്നെ കേന്ദ്ര സർക്കാർ പരിഹരിക്കണമെന്ന് അത് ആവശ്യപ്പെടുന്നു. ന്യൂനപക്ഷങ്ങൾക്കെതിരായ ഇത്തരം ആക്രമണങ്ങളെ തമിഴ്‌നാട് തോഹീദ് ജമാത്ത് ശക്തമായി അപലപിക്കുന്നു.

മീഡിയ കോൺടാക്റ്റ്: 09789030302

ആദരവോടെ,
ഇ.മുഹമ്മദ്
സംസ്ഥാന ജനറൽ സെക്രട്ടറി
തമിഴ്‌നാട് തൗഹീദ് ജമാഅത്ത്.