டில்லியில் மத்ரஸா மாணவன் முஹம்மது அஸீம் அடித்து படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

டில்லியில் மத்ரஸா மாணவன் முஹம்மது அஸீம் அடித்து படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

டெல்லி மால்வியா நகர் பகுதியில் உள்ள மத்ரஸா ஒன்றில் பயின்று வந்த 8 வயது முஹம்மது அஸீம் என்ற சிறுவன் மத்ரஸா விடுதியின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவனையும் அவனது நண்பர்களையும் சங்பரிவார கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த முஹம்மது அஸீம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்ற மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

மிகவும் புத்திசாலி மாணவரான முஹம்மது அஸீம் அரபி மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர். தெற்காசிய நாடுகளிலிருந்து மேல் சிகிச்சைக்காக இந்தியா வரும் நோயாளிகளுக்கு மொழியாக்கம் செய்து சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவருடைய உயிரை சங்பரிவார சக்திகள் கொடுமையாக பறித்துள்ளது.

மத்ரஸா அருகே மது அருந்திவிட்டு பாட்டில்களை மத்ரஸா உள்ளே வீசும் பழக்கத்தை வழமையாக கொண்டுள்ள சங் பரிவார கும்பலால் திட்டமிட்டு அடித்து படுகொலை செய்யப் பட்டுள்ளான் முஹம்மது அஸீம். இந்த படுகொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து நாட்டு மக்கள் மீது தொடர்ந்து இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றது.

வன்முறையை வேடிக்கை பார்க்கும் அரசாகவும், மனித உயிர்களை மலிவாக கருத்தும் அரசாகவும் மத்திய அரசு இருந்து வருகிறது.

சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வருவதால் தான் முஸ்லிம்கள் இத்தனை வன்முறை சம்பவங்களுக்கும் அமைதி காத்து வருகின்றனர். அரசு தங்களை பாதுகாக்காது என்ற நிலை ஏற்பட்டால் முஸ்லிம்களும் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழியை கையில் எடுப்பார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்.

முஹம்மது அஸீம் படுகொலைக்கு காரணமான சங்பரிவார ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

முஹம்மது அஸீமை இழந்து துன்பத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு ரூபாய் 25,00,000/- இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

ஊடகத் தொடர்புக்கு:97890 30302

இப்படிக்கு,
இ. முஹம்மது
மாநில பொது செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.