உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்!

ஒரு வார பிரச்சாரம் 16/7/2020 – 22/7/2020

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் அகிலத்தாருக்கு அருட்கொடையாகத் தந்தான்.

உலகில் வாழும் கோடான கோடி முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாய், அழகிய முன்மாதிரியாய், உயிரினும் மேலானவராய் திகழ்பவர் தான் இறுதித் தூதர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) ஆவார்கள்.

இம்மாமனிதர் தனி மனித ஒழுக்கத்தோடும், நாணயத்தோடும், நற்பண்புகளோடும், பணிவோடும். எளிமையோடும் வாழ்ந்தவராவார்கள்.

அவர்களிடத்தில் இல்லாத நற்குணம் இல்லை.

தீய குணத்தின் சாயல் கூட அவரிடத்தில் இல்லை.

உலகமே போற்றும், இத்தகைய உன்னத தூதரை, அன்னியப் பெண்ணைத் தொடாமல் கண்ணியமாக வாழ்ந்த நபிகளாரைக் கேலி செய்யும் விதமாக கார்டூனிஸ்ட் வர்மா என்பவன் கேலிச் சித்திரம் வரைந்துள்ளான்.

இந்த எதிரிக்கும் இவனுக்கு துணை நின்றவர்களுக்கும் தகுந்த பாடம் கற்பிக்கும் விதமான சட்ட நடவடிக்கைகளை ஜனநாயக வழியிலே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும். (இன்ஷா அல்லாஹ்)

இது ஒரு புறம் இருந்தாலும் எந்த நபிகள் நாயகத்தின் மீது களங்கம் கற்பிப்பதற்கு இக்கயவர்கள் நினைத்தார்களோ அவர்களின் எண்ணங்களில் மண்ணள்ளிப் போடும் விதமாக உத்தம தூதரின் உன்னத போதனைகளை நாம் உலகறியச் செய்ய வேண்டிய தருணம் இது.

எனவே ஒரு வார காலம் 16.07.2020 முதல் 22.07.2020 வரை நபிகளாரின் போதனைகளை உலகறியச் செய்யும் பணியை நாம் முன்னெடுக்க வேண்டும்.
டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத் தளங்களில் இயன்றவரை நபிகளாரின் போதனைகளால் நாம் நிரப்ப வேண்டும்.

அவர்களின் சாதனைகளை, ஒழுக்க வாழ்வை , நற்பண்புகளை அதிகமதிகம் மக்களிடையே நாம் பரப்ப வேண்டும்.

பேனர் டிஸைன்கள் வழியாக நபி(ஸல்) பற்றிய செய்திகளை பல வகைகளில் உருவாக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் நாம் பதிவிடக்கூடிய ஒவ்வொரு செய்திகளும், அந்த உத்தமத்தூதரின் உன்னத வாழ்வை உலக மக்கள் அனைவரும் குறிப்பாக மாற்று மத சொந்தங்களும் அறிந்து கொள்ளும்படி இருந்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு நாம் செய்யும் பிரச்சாரம் நபிகளாரை இழிவுபடுத்த நினைப்போருக்கு மரண அடியாக அமையும் . (இன்ஷா அல்லாஹ்)

உங்களின் பதிவுகளை டிவிட்டரின் கீழ்கண்ட ஹேஸ்டேக் களில் பதிவு செய்யவும்

#MuhammadMercyForMankind
#SpreadTeachingsOfProphet
#ImposeGoondasOnVarma

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

FACEBOOK I TWITTER I WHATSAPP I INSTAGRAM DP

நபிகள் நாயகம் குறித்து தலைவர்கள், அறிஞர்கள்