ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த அறிவிப்பு

ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவி வருவதை நீங்கள் அறிவீர்கள். நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது..

இதை ஒட்டி மக்களை வீடுகளில் தொழுதுக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நமது ஜமாஅத் சார்பில் விரிவாக விளக்கி வீடியோ பதிவும் வெளியிட்டிருந்தோம்.

அறிக்கை மூலமும் தெளிவுப்படுத்தியிருந்தோம்.

இந்நிலையில் நோய் தொற்றினால் யார்?யார்? பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாத சமுதாய தொற்று எனும் மூன்றாவது நிலையை இந்தியா-தமிழகம் அடைந்துள்ளதாக தற்போது அரசு தரப்பில் அஞ்சப்படுகின்றது.

சமுதாய தொற்று உள்ள தற்போதைய சூழ்நிலையில் சிறிய அளவில் கூடுவதும் மக்களுக்கு ஆபத்தாக அமைந்து விடும் சூழல் உள்ளது.

அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து விட்டது.

இதனை தொடர்ந்து மக்கள், பள்ளிவாசல் அல்லது மர்க்கஸ்களுக்கு தொழவருவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உருவாகியுள்ளன.

அதனால் இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நமது பள்ளிகள், மர்க்கஸ்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக வீடுகளில் லுஹர் தொழுமாறும், இயன்றவர்கள் வீட்டில் ஜமாஅத்தாக தொழுதுக் கொள்ளவும் என்று கேட்டுக் கொள்கின்றோம்..

இவ்வாறு செய்வதற்கு மார்க்கம் நமக்கு அனுமதியும் அளிக்கின்ற காரணத்தினால் இதை அனைத்து மாவட்ட கிளை நிர்வாகிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மர்க்கஸ்களில் அறிவிப்பு செய்து விடவும்.

நிலைமை சீரடைந்தபின் சூழலுக்கேற்ப தலைமை சார்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 

Important Announcement regarding Congregational Prayers and Jum’ah

As you are aware that coronavirus is spreading rapidly all over the world. The government has initiated several precautionary measures to prevent its spread.

On similar lines, we have earlier emphasized the need to offer Salah in their homes via a video message. Additionally, we have issued a circular in this regard.

We are in a crucial phase in which we wouldn’t be able to identify the affected individuals. The Government currently fears that India has reached the third stage of the so-called community spread.
In the current pandemic situation, it is highly dangerous to gather people even in small numbers and social distancing is highly recommended.

At this juncture, Government has also imposed total lock-down effective last night. This has given rise to practical difficulties for congregational prayers in our Markaz and Masjids.

Considering the situation, we hereby inform that congregational prayers and Jum’ah will not be held from immediate effect.
We also urge you to offer Zuhr Salah at homes instead of Jum’ah on Fridays. Since, we have provision to do so according to our Religion, we urge our district and branch executives to announce it in their respective Masjids/Markaz.

Insha Allah, State Head Office will issue appropriate guidelines when the normalcy returns.

Regards,
E. Mohamed
State Secretary, Tamil Nadu Thowheed Jamaath,
Chennai