#BringBackTNExpats

வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை விரைந்து அழைத்து வர கோரி தமிழகம் தழுவிய இணைய வழி போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.

வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை தாயகம் அழைத்து வருவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கம்பெனிகள் மூடப்பட்டதால் தொழிலாளர்களாக பலர் சாலைகளில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

*இவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

தமிழகம் வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.

என்கிற கோரிக்கையை முன்வைத்து மாநிலம் தழுவிய இணைய வழி ஆர்ப்பாட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் 15.6.2020 திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் 10.45 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்
வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை விரைந்து அழைத்து வரவேண்டும். தமிழகம் வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.

என்ற கோரிக்கை அடங்கிய பதாகைகள் ஏந்தி சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து ஆண்கள்,பெண்கள் என அனைவரும் குடும்பத்துடன் பங்கெடுப்பார்கள்.

ஊடக தொடர்புக்கு: 9789030302

இப்படிக்கு,
இ. முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.