அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்) – இரண்டு மாத கால பிரச்சாரம்

லோகோ

Click here to download logo PNG
Click here to download logo JPG
Click here to download logo PSD

போஸ்டர்

Click here to download poster PSD file

டோர் ஸ்டிக்கர்

Click here to download door sticker PSD file

நோட்டீஸ்

யார் இந்த முஹம்மது நபி(ஸல்)?

அறிந்து கொள்வோம்

இவர் மரணித்து 1400 ஆண்டுகளுக்கும் மேல் கடந்த போதும் இவரைப் பார்க்காமலே இவரை பின்பற்றும் மக்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள்.

இவர் குறித்து யாரேனும் அவதூறுப் பேசினால் உலக முஸ்லிம்கள் அனைவரும் கொந்தளிக்கிறார்கள்.

முஸ்லிம் அல்லாத பல தலைவர்களாலும், அறிஞர்களாலும் போற்றப்படுகிறார். புகழப்படுகிறார்.

இத்தனை சிறப்புகளுக்கும் இன்னும் பல சிறப்புகளுக்கும் சொந்தகாரரான முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா?  சிறிது நேரம் உங்கள் கைகளில் தவழும் இப்பிரசுரத்தை படியுங்கள்!!

முஹம்மது நபி(ஸல்)  என்பவர் கிபி 570ஆம் ஆண்டில் பாலைவன தேசமான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் ஊரில் பிறந்தவர்கள்.

முஹம்மது நபி(ஸல்)  அவர்கள் பிறப்பதற்கு முன்பே தந்தையையும், பிறந்து சில வருடங்களில் தாயையும் இழந்தார்கள். அதன் பின் பெரிய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். ஆடுகள் மேய்த்தார்கள், வியாபாரத்தை மேற்கொண்டார்கள். மக்கள் மத்தியில் நாணயமிக்கவர் என்று அழைக்கப்பட்டார்கள்.

முஹம்மது நபி(ஸல்)  அவர்கள்  தன்னுடைய 25 ஆம் வயதில் கதீஜா(ரலி)  என்கிற விதவைப் பெண்ணை மணம் முடித்தார்கள்.

முஹம்மது நபி(ஸல்)  அவர்களின் வாழ்க்கை 40 வயது வரை சாதாரணமாகவே நகர்ந்து வந்தது. அவரது 40ஆம் வயதில் தான் வேத அறிவிப்பின் மூலமாக இஸ்லாமிய மார்க்கம் அவருக்கு வழங்கப்பட்டு இறைத்தூதராக நியமிக்கப்படுகிறார்கள்.

அன்று முதல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட இறைச் செய்திகளை மக்களுக்கு எடுத்து சொன்னார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் செய்த சீர்திருத்த பிரச்சாரத்தின் காரணத்தால் பிறந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

அனைத்தையும் இழந்து மதீனாவிற்கு சென்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களை அங்கிருந்த மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்.

சமத்துவத்தை போதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

வலியவர்  எளியவர்  என்று பாகுபாடு செய்து, உயர்வு தாழ்வு கற்பித்த மக்கள் மத்தியில்  யாரும் யாரை விடவும் பிறப்பால், மொழியால், நிறத்தால், இனத்தால், பாரம்பரியம் என எந்த அடிப்படையிலும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை. மனிதர்கள் அனைவரும் சமம். ஒரு தாய் மக்கள் என பு400 ஆண்டுகளுக்கு முன்பே தீண்டாமை வேறுபாட்டை உடைத்தெறிந்தார்கள்.

பெண்ணுரிமை வழங்கிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

பெண் குழந்தைகள் என்றால் இன்றும் வெறுக்கின்ற மக்கள் இருக்கிறார்கள். அறியாமைக் காலம் என்று பெயரெடுத்த அன்றைய  காலகட்டத்தில் உயிருடன் பெண் குழந்தையை புதைத்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் மத்தியில் பெண் குழந்தை பிறந்தால் நற்செய்தி என்று கூறி பெண் சிசுக் கொலையையும் தடுத்தார்கள்.

பெண்களுக்கான திருமண உரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, பெண்களுக்கு மணமகன் தான் திருமணத்தின் போது மஹர் எனும் மணக்கொடையை வழங்க வேண்டும் என்பன போன்ற ஏராளமான உரிமைகளையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்தார்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகத்தை எதிர்த்தவர்களே பின்னால் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்தின் தோழர்களாக மாறினார்கள்.

தன்னை எதிர்த்தவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றியவர்கள், கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் என அனைவரையும் முஹம்மது நபி மன்னித்தார்கள்.

எதிரிகள் கூட முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நேர்மையையோ ஒழுக்கத்தையோ குறை சொல்லவில்லை.

எதிரிகள் படை எடுத்து வந்த  நிலையில் நாட்டையும் நாட்டு மக்களையும்  தற்காத்துக் கொள்ளவே ஒரு நாட்டின் அரசராக போரை எதிர் கொண்டார்கள். போர்களத்தில் கூட பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள், வழிபாட்டுத்தலங்கள், பொது சொத்துக்களை தாக்க கூடாது என்று தனது படையினருக்கு கட்டளையிட்டார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சிப் புரிந்த நாட்டிலேயே இஸ்லாமியர் அல்லாதவர்களும் வாழ்ந்து வந்தனர்.

அவர்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நேர்மையாளராகத்தான் பார்த்தார்கள். முஹம்மது நபி(ஸல்)  அவர்களிடம் தீர்ப்பு கேட்போராகத்தான் இருந்தார்கள்.

மாமன்னர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் எளிய வாழ்க்கை

ஒரு நாட்டின் மன்னராக இருந்த நிலையிலும் வாயில் காப்பாளர்கள் இல்லாத அனைவரும் எளிதாக அனுகக்கூடிய வகையில் வாழ்ந்தார்கள்.

பத்துக்கு பத்து அளவு கொண்ட சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் படுத்து உறங்கும் பாயின் அச்சுகள் முதுகில் பதியும் நிலையில் அவர்களின் படுக்கை இருந்தது. பாயையே வீட்டின் வாசல் மறைப்பாகவும் பயன்படுத்தினார்கள்.

அரசின் கஜானாவை ஏழைகளுக்காக அள்ளி கொடுத்த போதும் தனது வீட்டில் மூன்று நாள் தொடர்ந்து அடுப்பு எரியாத நிலையில் வறுமையில் வாழ்ந்தார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், இறைத் தூதராகவும் இருந்த போதிலும் தனக்கென எந்த சொத்தையும் சேர்த்துக் கொள்ளவில்லை.  இப்படியான எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்கள். இதுவே அவர்களது நேர்மைக்கு சான்றாக இருக்கிறது.

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கொள்கை பிரச்சாரம் 

படைத்த இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். படைப்பினங்களை வணங்க கூடாது. கடவுள் நிலையை மனிதன் உட்பட எந்த படைப்பினமும் அடைய முடியாது என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள்.

பேய், பிசாசுகள் கிடையாது, எதிர்காலம் பற்றிய ஞானம் மனிதனுக்கு கிடையாது, ஜோசியம், குறிகேட்பது, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது, சகுணம்  பார்ப்பது போன்ற அனைத்து மூட நம்பிக்கைகளையும் ஒழித்தார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சமூக சீர்திருத்தம்

ஏழ்மையை ஒழிக்கும் ஜக்காத் எனும் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

விபச்சாரம், வட்டி போன்ற சமூக தீமைகளை ஒழித்தார்கள்.

இன்று அதிகமான குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் மதுவை தடை செய்து, மதுவிற்கு அடிமையாய் இருந்தவர்களை நல்வழியில் மீட்டெடுத்தார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திய குடிமக்களின் பாதுகாப்பு

உயர் குலத்து பெண் திருடிய போது சிபாரிசுகளுக்கு இடமளிக்காமல் அவளுக்கான தண்டனையை உறுதி செய்தார்கள். வலியவருக்கு ஒரு நீதி எளியவருக்கு ஒரு நீதி இங்கு இல்லை என்று அனைவருக்கும் சமநீதியை உறுதி செய்தார்கள்.

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றம் செய்ய அச்சம் ஏற்படும். குற்றமும் குற்றவாளிகளும் குறைவார்கள் என்ற அடிப்படையில் மக்களின் உயிருக்கும், உடமைக்கும், மானத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்தார்கள்.

இதனால் விபச்சாரம், கொலை, கொள்ளை போன்ற அனைத்து குற்றங்களுக்கும் முற்றுபுள்ளி வைத்து மக்களுக்கு அச்சமற்ற சூழலை ஏற்படுத்தினார்கள்

உலகம் போற்றும் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற  யூத அறிஞர் 1978 ஆம் ஆண்டு  ‘தி ஹண்ட்ரட்’ என்ற புத்தகத்தை வெளியிடுகின்றார். அதில் உலகின் தலைசிறந்த 100 நபர்களை அவர் பட்டியலிடுகிறார். அதில் முதல் இடம் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு  வழங்கியுள்ளார். அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக வழிகாட்டியதாலே  முஹம்மது  நபி(ஸல்) அவர்களுக்கு  முதல் இடம் கொடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடுகிறார்.

இன்னும் இதுபோன்ற ஏராளமான தலைவர்களும் அறிஞர்களும் வியந்து பார்க்கும் தலைவராக முஹம்மது நபி(ஸல்) உள்ளார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பற்றி இன்னும் இது போன்ற ஏராளமான சிறப்புகளையும் அவர்களது வாழ்க்கையையும் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அவரைப் பற்றி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டுமா?

தொடர்பு கொள்ளுங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தொடர்பு எண் :

Click here to download notice PDF