85 வயது பாட்டியை கற்பழித்த பேரன் : – மதுவால் தொடரும் கேடுகள்!

டில்லியில், 85 வயது மூதாட்டியை, மது போதையில், சொந்தப் பேரனே பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டில்லியில் உள்ள, சீலம்பூர் பகுதியில், 35 வயது நபர், மது போதையில், தன் பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கும் மது அருந்தினார். இளைஞரின் பாட்டி, அவரை கண்டித்ததால், ஆத்திரத்தில், 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.

மூதாட்டி மயக்கமடைந்ததால், பேரன் அங்கிருந்து தப்பிச் சென்றான். பாட்டியின் அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பாட்டியின் உடல் நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள பேரனை, போலீசார் தேடி வருகின்றனர்.

மதுவால் ஏற்படும் கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. குமரி யார்? கிழவி யார்? என்பது கூடத் தெரியாமல் போதை தலைக்கேறி தனது 85 வயது மூதாட்டியையே கற்பழிக்கக்கூடிய அளவிற்கு இந்த மதுபோதை மக்களை மாக்களாக ஆக்குகின்றது என்றால் ஆளக்கூடியவர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். மதுவுக்குத் தடைபோட வேண்டும்.

இல்லாவிட்டால் பாட்டிகள் கற்பழிப்பு, தந்தையே தனது மகளை கற்பழித்தல் போன்ற கொடூரங்கள் தொடரும். அதனால் அந்த ஆட்சியாளர்களும் ஒருநாள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.