80 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்: காஞ்சி TNTJ

45-4காஞ்சிபுரம் நகர டிஎன்டிஜே கிளையின் சார்பில் காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டை தோப்புத் தெருவில் கடந்த 14-06-2009 அன்று மாலை 7 மணியளவில் 80 ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் எம்.எப். ஜெய்னுல்லாபுதீன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கானத்தூர் பஷீர் மற்றும் மாநிலப் பேச்சாளர் அபு சுஹைல் ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.