72வது இந்திய குடியரசு தினம் 2021 – நோட்டீஸ்

72வது இந்திய குடியரசு தினம் – நோட்டீஸ்

இறைவனின் திருப்பெயரால்

இந்தியக் குடியரசும் ! இஸ்லாமியர் பங்களிப்பும். !!

ஆங்கிலேயரின் பிடியில் இருந்த இந்திய தேசம் . மண்ணின் மைந்தர்களின் மகத்தான போராட்டங்களால் விடுதலை பெற்றது. இவ்விடுதலைக்கு வித்திட்டதில்  இஸ்லாமியர்களின் தியாகம் அளப்பரியதாகும். அதன் பின் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு நாடாக இந்தியா உருவெடுத்தது. இந்தியாவின் எல்லா வகை வளர்ச்சியிலும் இஸ்லாமியர்கள் பங்களித்தது போலவே நாடு குடியரசாக உருவெடுத்ததிலும் இஸ்லாமியர்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ஒரு நல்ல நாடு உருவாக்குவதற்குத் தேவையான நிர்வாகம், கட்டமைப்பு, சிறந்த பொருளாதாரக் கொள்கைகள் வெளிநாடுகளோடு இராஜிய உறவுகள் இராணுவக் கட்டமைப்பு, துறை ரீதியாக பிரித்து நல்லாட்சி செய்தல் என இவை அனைத்திலும் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கே  முன்னோடிகளாக திகழ்ந்தனர்.

இந்திய இராணுவக் கட்டமைப்பும் இஸ்லாமியர்களும்.

இந்திய இராணுவம் உலகில் சிறந்த கட்டமைப்பைக் கொண்டதாக கருதப்படுகிறது. தரைப்படை, கப்பல் படை , விமானப் படை என முப்பரிமாணம் கொண்டது இந்திய இராணுவம். இதற்கு முன்மாதிரியாக விளங்கியதில் இரண்டு இராணுவங்களை முத்தாய்ப்பாகக் கூறலாம் ஒன்று நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம். மற்றொன்று ஹைதர் மற்றும் திப்புசுல்த்தான் கட்டமைத்த இராணுவம்.

இந்திய தேசிய இராணுவத்தில் இஸ்லாமியர்கள்

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அன்று ஆங்கிலேயர்களின் உறக்கத்தை கலைத்தது. ஹைதர் அலி இராணுவம் அவர்களின் நிம்மதியை நிர்மூலமாக்கியது. இந்த இரண்டிலும் இஸ்லாமியர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்,

நேதாஜியின் இராணுவத்தில் ராஜா ஹபிபுர் ரஹ்மான் சுபாஷ் சந்திர போஸுக்கு முதன்மை செயலாளராக இருந்தார். ஜெனரலாக ஷா நவாஸ் கான் பணியாற்றினார்.

அது மட்டுமின்றி கும்பகோணம் சுல்தான், கம்பம் சிக்கந்தர், முதுகுளத்தூர் சுல்த்தான் இராமநாதபுரம் சையது கனி, திருவிடைச்சேரி அப்துல் வாஹிப், மன்னார் குடி சிக்கந்தர். பட்டுக்கோட்டை அப்துல்காதர், பள்ளப்பட்டி மணிமொழி மவ்லானா, இளையாங்குடி கரீம் கனி, இராஜகிரி அப்துல்லாஹ், திருப்பத்தூர் தாஜ்தீன், அத்தியூத்து அபூபக்கர், பக்கிரிபாளையம் அனுமன்கான், செங்குன்றம் கனி, சென்னை அமீர் ஹம்சா, சென்னை ஹமீது, வண்ணாரப்பேட்டை ஹயாத் கான், புதுவலசை இப்ராஹீம், பார்த்திபனூர் இப்ராஹீம், இளையாங்குடி அப்துல் கபூர், மேலூர் அப்துல் ஹமீது, சோழ சக்கர நல்லூர் அப்துல் ஜப்பார், தத்தனூர் அப்துல் காதர், திருப்பூர் அப்துர் ரஜாக், குருவம் பள்ளி அப்துல் மஜீத், கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு, லெப்பைக்குடிகாடு அப்துல் சலாம். இராம்நாடு அப்துல் வஹாப், மானாமதுரை அப்துல் பாசித், அத்தியூத்து இப்ராஹீம், சென்னை ஜாபர் ஹக்கிமி, சிங்கமங்கலம் ஜைனுல் ஆபிதீன், திருப்பத்தூர் காதர் பாட்ஷா, புதுவலவை முஹம்மது லால் கான்,  பார்த்திபனூர் கச்சி மைதீன், தஞ்சை முஹம்மது  தாவூத், அறந்தாங்கி முஹம்மது செரீபு, திருச்சி வரகனேரி முஹம்மது சுல்த்தான்,  சென்னை வடபழனி முஹம்மது யூசுப் சிவகங்கை முஹம்மது இப்ராஹீம், சென்னை முஹம்மது உமர், மதுரை மொய்தீன் பிச்சை,  அம்பா சமுத்திரம் முஹம்மது மீராசா, கும்பகோணம் ரஹ்மத்துல்லாஹ், குடியாத்தம் நஜீமுல்லாஹ், கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு இன்னும் பல இஸ்லாமியர்கள் இந்திய தேசம் காக்க இராணுவத்தில் பணிபுரிந்தனர்.

ஹைதர் மற்றும் திப்புவின்  இராணுவப் புரட்சி:

ஹைதர் என்ற அரபுச் சொல்லுக்கு சிங்கம் என்று பொருள். ஹைதர் அலி தன் பெயருக்கேற்ப சிங்கமாகவே திகழ்ந்தார். இவர் எடுத்த இராணுவ நடவடிக்கைகள், அடுக்கடுக்கான இராணுவக் கட்டமைப்புகள், அவ்வப் போது வியூகங்களை மாற்றியமைக்கும் பாங்கு, திண்டுக்கல்லில் அவர் ஏற்படுத்திய ஆயுதத் தொழிற்சாலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவர்கள் பீரங்கி கொண்டு ஆங்கிலேயர்களை விரட்டியடித்தனர்.

ஹைதர் அலி மற்றும் திப்புசுல்த்தான் இருவரும் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தை உடைக்க நெருங்கிவிட்டிருந்தார்கள் என முன்னால் பிரதமர் ஜவஹர் லால் நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திப்புசுல்த்தானின் பீரங்கித் தொழில் நுட்பத்தை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் நாசாவில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மூவர்ணக் கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்மணி.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் ஏற்றப்படுகின்ற இந்தியாவின் அடையாளமாகத் திகழ்கின்ற தேசியக் கொடியை வடிவமைத்ததே ஹைதரா பாத்தைச் சேர்ந்த  சுரையா தியாப்ஜி என்ற இஸ்லாமிய பெண் ஆவார்.

இன்னும் இஸ்லாமியர்கள் இந்திய தேசத்திற்காக பல தியாகங்களைச்  செய்துள்ளனர்.

 • இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உன் தியாகத்தால் உதித்தது என பகதூர் ஷாவின் கல்லறையில் ராஜீவ் காந்தி எழுதினார்.
 • 1921 அஹமதாபாத் மாநாட்டில் பூரண விடுதலை வேண்டும் என முதன் முதலில் முழங்கியவர் ஹஜ்ரத் மொஹானி.
 • வெள்ளையர்களுக்கு எதிராக உருது முஹல்லா என்ற பத்திரிக்கையை துவங்கி இந்திய விடுதலைக்கு வித்திட்டார் ஹஜ்ரத் மொஹானி.
 • நேதாஜியின் இராணுவத்திற்கு அன்றே ஒரு கோடி வழங்கிய வள்ளல் ஹபீப்
 • குமரனுடன் அப்துல் லத்தீப் அக்பர் அலி மைதீன் கான் அப்துல் ரஹீம் அப்துல் லதீப் வாவா ஷாஹிப் ஷேக் பாபா ஷாஹிப் ஆகியோர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றதால் ஆங்கிலேயர்களால் தண்டிக்கப்பட்டனர்.
 • ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக கேரளா மாப்பிள்ளாக்கள் சரக்கு இரயில் அடைத்து கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டனர்.
 • வ.உ.சி கைதுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முதலில் சுட்டுக் கொல்லபட்டவர் முஹம்மது யாஸீன் என்ற இஸ்லாமிய இளைஞர்
 • ஆங்கிலேயர்களின் பொருட்களை புறக்கணிக்கும் சுதேசி திட்டத்திற்காக ஆடைகளை தயாரித்து அதற்கு கதர் எனப் பெயரிட்டவர் ஆலாஜி பானு
 • பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவனான சர் ஹென்றி லாரன்ஸை தன் கையால் சுட்டுக் கொன்ற வீர மங்கை பேகம் ஹஜரத் மஹல்.
 • 1800 ஆம்ஆண்டு ஓசூரில் தலைமையேற்று ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர் ஃபத்தேஹ் முஹம்மது.
 • ஒத்துழையாமை இயக்கத்திற்காக தனது பி ஏ படிப்பை துறந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் ஷாஹிப்.
 • தனது 72 வயது வரை இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விடுதலைக்காக குரல் கொடுத்தார் பீபியம்மாள்.
 • திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப் போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும். – Young india பத்திரிகையில் மகாத்மா காந்தி
 • மதுரை கோரிப்பாளையத்தில் நடந்த ஆங்கிலேயருக்கு எதிரான கள்ளுக்கடை மறியலில் 19 பேரில் 15 பேர் முஸ்லிம்கள்

இது போன்று இந்திய நாடு விடுதலை பெற்றதற்க்கும் குடியரசு நாடாக உருவெடுத்ததற்க்கும் இஸ்லாமியர்கள் செய்த பங்களிப்பும் தியாகங்களும் ஏராளம் ஏராளம்.

இவண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இரத்ததான  நோட்டீஸில் கீழே உள்ள வாசகங்களை இணைக்கவும்.

 • இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உன் தியாகத்தால் உதித்தது என பகதூர் ஷாவின் கல்லறையில் ராஜீவ் காந்தி எழுதினார்.
 • 1921 அஹமதாபாத் மாநாட்டில் பூரண விடுதலை வேண்டும் என முதன் முதலில் முழங்கியவர் ஹஜ்ரத் மொஹானி.
 • வெள்ளையர்களுக்கு எதிராக உருது முஹல்லா என்ற பத்திரிக்கையை துவங்கி இந்திய விடுதலைக்கு வித்திட்டார் ஹஜ்ரத் மொஹானி.
 • நேதாஜியின் இராணுவத்திற்கு அன்றே ஒரு கோடி வழங்கிய வள்ளல் ஹபீப்
 • குமரனுடன் அப்துல் லத்தீப் அக்பர் அலி மைதீன் கான் அப்துல் ரஹீம் அப்துல் லதீப் வாவா ஷாஹிப் ஷேக் பாபா ஷாஹிப் ஆகியோர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றதால் ஆங்கிலேயர்களால் தண்டிக்கப்பட்டனர்.
 • ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக கேரளா மாப்பிள்ளாக்கள் சரக்கு இரயில் அடைத்து கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டனர்.
 • வ.உ.சி கைதுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முதலில் சுட்டுக் கொல்லபட்டவர் முஹம்மது யாஸீன் என்ற இஸ்லாமிய இளைஞர்
 • ஆங்கிலேயர்களின் பொருட்களை புறக்கணிக்கும் சுதேசி திட்டத்திற்காக ஆடைகளை தயாரித்து அதற்கு கதர் எனப் பெயரிட்டவர் ஆலாஜி பானு
 • பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவனான சர் ஹென்றி லாரன்ஸை தன் கையால் சுட்டுக் கொன்ற வீர மங்கை பேகம் ஹஜரத் மஹல்.
 • 1800 ஆம்ஆண்டு ஓசூரில் தலைமையேற்று ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர் ஃபத்தேஹ் முஹம்மது.
 • ஒத்துழையாமை இயக்கத்திற்காக தனது பி ஏ படிப்பை துறந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் ஷாஹிப்.
 • தனது 72 வயது வரை இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விடுதலைக்காக குரல் கொடுத்தார் பீபியம்மாள்.
 • திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப் போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும். – Young india பத்திரிகையில் மகாத்மா காந்தி
 • மதுரை கோரிப்பாளையத்தில் நடந்த ஆங்கிலேயருக்கு எதிரான கள்ளுக்கடை மறியலில் 19 பேரில் 15 பேர் முஸ்லிம்கள்
 • திப்புசுல்த்தானின் பீரங்கித் தொழில் நுட்பத்தை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் நாசாவில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
 • நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அன்று ஆங்கிலேயர்களின் உறக்கத்தை கலைத்தது. ஹைதர் அலி இராணுவம் அவர்களின் நிம்மதியை நிர்மூலமாக்கியது.
 • நேதாஜியின் இராணுவத்தில் ராஜா ஹபிபுர் ரஹ்மான் சுபாஷ் சந்திர போஸுக்கு முதன்மை செயலாளராக இருந்தார். ஜெனரலாக ஷா நவாஸ் கான் பணியாற்றினார்.