6 வது கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – அபுதாபி!

0308101307010203
0609

சமுதாய நல்லிணக்கத்தை பேனுவதிலே தமிழகத்தில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துள்ள மாபெரும் பேரியியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
•    ரத்த தானத்திலே முதலிடம்
•    மனிதநேய உதவிகளில் முன்னோடி
•    பேரிழப்புகளின்போது துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பதிலே விரைவு
•    சமுதாய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு

இப்படி சமுதாய அக்கறையுடன் செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வழி முறையை பின்பற்றி அதன் வளைகுடா பகுதி கிளையான அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் முஸாபா ஐகாட்சிட்டியும் இணைந்து இஸ்லாமிய மார்க்க்த்தினை பிற மத சகோதரர்களும் தெரிந்து கொள்ளவும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையிலும் கடந்த ஆறு வருடங்களாய் தொடர்ந்து பிற மத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரை போட்டியை பல்வேறுபட்ட தலைப்புகளில் நடத்தி வருகின்றது.

அதனடிப்படையில் இந்த வருடமும் ‘இன்றைய கலாச்சார சீரழிவுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் கட்டுரை போட்டியை அறிவிப்பு செய்திருந்தது எந்த வருடமும் இல்லாத வகையிலே இந்த வருடம் பிற மத சகோதர சகோதரிகளிடமிருந்து அதிகமான கட்டுரைகள் வந்து சேர்ந்தது.

இப்படி வந்த கட்டுரைகளில் சிறந்த மூன்று கட்டுரைகளை ஜமாஅத்தின் தேர்வுகுழு தேர்வு செய்தது.

தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி கடந்த 18.12.2009 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அபுதாபி எலக்ட்ரா தெருவில் அமைந்துள்ள அல் இப்ராஹீம் ரெஸ்டாரென்ட் பார்டிஹாலில் நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட பிற மத சகோதர சகோதரிகள் நிகழச்சியில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் முஹமமதுஷேக் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மூத்த நிர்வாககுழு உறுப்பினர் யூசுப்அலி அவர்கள் வரவேற்புரை நிழ்த்தினார்கள்.  அதன்பின்னர் வெற்றி பெற்ற முதல் மூன்று கட்டுரையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

05மேலும் கட்டுரை எழுதிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் விபரம்:
•    முதல் பரிசு – சகோ. இராமச்சந்திரன்
•    இரண்டாம் பரிசு – சகோ. ஃபிரான்ஸிஸ் ஜான்ஸன்
•    மூன்றாம் பரிசு – சகோ. வினோத் மற்றும் சகோதரி. ஸ்ரீதேவி முத்துக்குமரன்

இதனை தொடர்ந்து இந் நிகழ்ச்சியின் மிக முக்கிய அங்கமான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் பிற மத சகோதர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமின் இபுராஹீம் அவர்களின் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற சிற்றுரையுடன் ஆரம்பமானது.

இந் நிகழ்சிக்கென ஒதுக்கப்பட் நேரத்தில் பிற மத சகோதரர்கள்  16 கேள்விகளை கேட்டார்கள் அவர்களுக்கிருந்த ஐயங்களை போக்கும் வகையிலே சகோதரர் ஹாமின்இபுராஹீம் மிக தெளிவாக பதிலளித்தார்கள் இப்படி பட்ட நிகழ்சிகளில் கடந்த காலங்களில் முஸ்லீம்கள் என்றாலே உலகில் நடக்கும் மொத்த தீவிரவாத செயல்களுக்கும் குத்தகைகாரர்கள் என்ற சந்தேகத்துடன்  கேள்விகள் கேட்க்கப்படும் நிலைகள் குறைந்து இப்போது இஸ்லாம் பற்றியும் இஸ்லாமியர்களின் செயல்கள் குறித்தும் கேள்விகள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஓர் சகோதரர் கேட்ட கேள்வி குறிப்பாக இவர்கள் தவ்ஹீத் கொள்கை பேசுபவர்களையும் உற்று நோக்குகின்றார்கள் என்பதை உணரமுடிகின்றது ‘வரதட்சனைக்கு எதிராக பேசக்கூடிய உங்கள் சகோரதரர்கள் தடம் மாறி வரதடசனை வாங்குகிறார்களே அது ஏன் என்று கேட்கின்றார்’ மேலும் RSS இயக்கத்திலே பயிற்சி பெற்ற ஒரு இளைஞர் நம்முடைய இந் நிகழ்ச்சிக்கு வருகை தந்து தன்னை ஓர் RSS காரன் என்று அறிமுகம் செய்து கொண்டு கேள்வி கேட்டது குறிப்பிடதக்கது.

கேள்வி கேட்ட அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிற மத சகோதர சகோதரிகளுக்கு  குறுந்தகடுகள் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற நூலும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக ஜமாஅத்தின் துணைத்தலைவர் இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)