3 வது பேச்சு பயிற்சி வகுப்பு – குவைத் மண்டலம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குவைத் மண்டலம் ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது மாபெரும் பேச்சாளர் பயிற்சி வகுப்பு கடந்த 25 -11 -11 அன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணி வரை தஃவா குழு பொறுப்பாளர் சகோ ராஜ் முஹம்மது தலைமையில் திருமங்கலக்குடி இலியாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த முறை பதினாறு பேச்சாளர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.பேச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குறிப்புகளுடனும், சரியான வரலாற்று உலக உதாரணங்களுடனும் சிறப்பாக உரையாற்றினர்.

சரியாக ஏழு மணியளவில் மண்டல துணை செயலாளர் இஞ்சீனியர் அப்துல் ஹமீத் அவர்களின் நன்றி உரையோடு இந்த மாத பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.