28-6-2009 கும்பகோணத்தில் கூடிய TNTJ மாநிலச் செயற்குழு: புர்கா அணியக்கூடாது என்று கூறிய பிரான்ஸ் அதிபருக்கு செயற்குழுவில் கண்டனம்

கடந்த 28-06-2009 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற் குழு மாநிலத் தலைவர் எம். பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களின் தலைமை யில் கும்பகோணம் மீரா மஹாலில் நடைபெற்றது. இம்மாநில செயற்குழுவில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் பின்வருமாறு :
1. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று திமுக கூட்டணிக்கு வாக்குகளை அளித்து அக்கூட்டணியை வெற்றிபெறச் செய்த தமிழக முஸ்லிம் மற்றும் பிற சமுதாய மக்களுக்கு இச்செயற்குழு மனமாற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. முஸ்லிம்களுக்கு திமுக அரசு வழங்கிய இடஒ துக்கீட்டில் சில குளறுபடிகள் களையப்படாமல் இருந்தன. அந்தக் குளறுபடிகள் களையப்பட்டு சரிசெய்யப்படும் என்று திமுக வாக்களித்ததின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சிக்கு தீவிர ஆதரவு அளித்து அக்கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்தது.
இவ்வாறு முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளைப் பெற்ற திமுக அரசு இதற்கு நன்றிக் கடனாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் உடனே குளறு படிகளை சரி செய்ய வேண்டும் என்றும் கிறிஸ்துவர்கள் திருப்பித் தந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை கவனத்தில் கொண்டு எவ்வித சட்டச் சிக்கலும் இல்லாத வகையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக கூட்டித் தர இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. காங்கிரஸ் கட்சி தனது 2004 தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் இடஒதுக்கீடு அளிப்பதாக வாக்களித்தது. ஆனால் தேர்தலுக்குப் பின் அதை காற்றில் பறக்க விட்டது. இருப்பினும் முஸ்லிம்கள் 2009 தேர்தலில் காங்கிரஸுக்கு மறுவாழ்வு கொடுத்து அக்கட்சியை அதிக இடங்களைப் பெற்ற தனிக் கட்சியாக ஆக்கி இருக்கின்றனர். முஸ்லிம்கள் செய்த இந்த பேருதவிக் காவும், 2004 தேர்தலில் கொடுத்த தேர்தல் வாக்குறு தியை காப்பாற்றும் விதமாகவும் முஸ்லிம்களுக்கு மத் திய அரசில் கல்வி வேலை வாய்ப்புகளில் உடனடியாக இடஒதுக்கீடு அளிக்குமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரிலும் கட்டணம் என்ற பெயரிலும் முஸ்லிம் களிடம் சுரண்டல் நடத்திக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் இந்தப் பகல் கொள்ளையை உடனடியாக கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த நிறுவனங்கள் இச்சுரண்டலை கை விடவில்லையெனில் அந்த நிறுவனங்கள் முன்னால் டிஎன்டிஜே ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் டிஎன்டிஜே மேற்கொள்ளும் என்று இச்செயற்குழு எச்சரிக்கின்றது.

5. நீண்ட காலமாக வக்ஃபு வாரியத்தில் ஊழல் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் வக்ஃபு வாரியத்தில் நடக்கும் ஊழல்களை சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரிக்க உத்தரவிடுமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6. முஸ்லிம்களை கொலை வெறியர்கள் என்று கொச்சைப்படுத்திய பெண் போலீஸ் அதிகாரி திலகவதி ஐ.பி. எஸ். மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

7. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம்களுக்கு புதுவையில் இடஒதுக்கீடு அளிப்போம் என்று அம்மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி அளித்தது. அதன்படி அதை செயல்படுத் தும் பணியில் இறங்கியிருக்கின்ற அந்தப் புதுவை அரசை இச்செயற்குழு பாராட்டுவதுடன், இடஒதுக்கீட்டின் பயனை இக்கல்வி ஆண்டிலேயே பெறும்வகை யில் அதற்குரிய அறிவிப்பை உடனடியாக அறிவிக் கும்படி புதுவை அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

8. நடந்து முடிந்த 2009 தேர்தலில் வாக்களித்தபடி முஸ்லிம்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்க ஆவண செய்யுமாறு புதுவை அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9. முஸ்லிம்களுக்கு இடதுக்கீடு இருமுனை கூரானவாள் என்று குறிப்பிட்டு இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை கொச்சைப்படுத்திய முஸ்லிம்களின் துரோகியும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித்தை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்யும்படி இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

10. முஸ்லிம் பெண்கள் புர்கா அணியக்கூடாது என்று பேசிய பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸியை இச்செயற் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தனித் தொலைக்காட்சி தொடங்குவது குறித்த டிஎன்டிஜே செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித் தொலைக்காட்சி தொடர்பாக அனைத்து சாதக பாதகங்களையும் செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட வாரியாக காலையிலிருந்து மாலைவரை எடுத்து வைத்தனர்.

அவை அனைத்தும் அலசி பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனக்காக தனித் தொலைக்காட்சி தொடங்குவது ஒப்புக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடங்கவிருக்கின்ற அதனுடைய தனி தொலைக்காட்சிக்கு
1. நிதி திரட்டுதல்,
2. சட்டப்படியான அனுமதி பெறுதல்
ஆகிய சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் நிர்வாகக் குழுவில் பொறுப்பு வகிக்கின்ற ஐவர் குழுவை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அந்த ஐவர் குழுவின் விபரம் வருமாறு :
1. பக்கீர் முஹம்மது அல்தாஃபி, மாநிலத் தலைவர்,
2. முஹம்மது சாதிக், மாநிலப் பொருளாளர்,
3. ஜின்னா, மாநிலச் செயலாளர்,
4. எஸ். கலீல் ரசூல், துணை பொதுச் செயலாளர்,
5. தவ்பீக், மாநிலச் செயலாளர்

இந்த ஐவர் குழு தங்களுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் இருந்து கொண்டு டிரஸ்ட்டுகளை அமைத்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு துரோகம் இழைக்கப்பட்ட முன் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்த தொலைக்காட்சிக் காக அமைக்கப்படவிருக்கும் நிறுவனம் அல்லது இயக்குனர்கள் குழுமம், நிதி ஆதாரம், அதனுடைய செயல்பாடு அனைத்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் முழு இறையாண்மைக்கு உட்பட்டு செயல்படும் என்று முன்னாள் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவையும் இச்செயற்குழுவில் நினைவூட்டப்பட்டது.

நிர்வாக சீரமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொருளாளராக இருந்த செய்யது இப்ராஹிம் அவர்களிடம் இமயம் டி.வி. நிகழ்ச்சிகளின் எடிட்டிங் பொறுப்பும், அத்தோடு தஃவா பணிகள் சம்பந்தமாக பிரச்சாரகர்களை அனுப்பும் பொறுப்பு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மர்கஸ்களுக்கு தலைமையிலிருந்து ஜும்ஆவிற்கு தாயீக்களை அனுப்பும் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட இரண்டு மிக முக்கியமான பொறுப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்பதால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தஃவா பணியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கருதி முஹம்மது சாதிக் பொருளாளராகவும், செய்யது இப்ராஹிம் மாநிலச் செயலாளராகவும் மாற்றப்பட்டு நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதற்கு மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.