23 கோடி பதுக்கல் – விசுவ ஹிந்து பரிசத் தலைவரிடமிருந்து வருமான வரித்துறை பறிப்பு

23 கோடி பதுக்கல் - விசுவ ஹிந்து பரிசத் தலைவரிடமிருந்து வருமான வரித்துறை பறிப்புTNTJ.net ன் பிரத்யேக தமிழ் செய்தி: ராஜஸ்தான் மாநிலத்தில் பணமாகவும் நகையாகவும் மற்றும் சொத்துக்களாகவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 கோடி மதிப்புள்ள பதுக்கல் சொத்துக்களை வருமான வரித்துறை ”தாமோதர் மோடி” என்பவரிடமிருந்து கைப்பற்றியுள்ளது.

இவர் வேறு யாரும் இல்லை விசுவ ஹிந்து பரிசத்தின் உதவித்தலைவர் என்று ஒரு தனியார் செய்தி தொலைகாட்சி நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமோதர் மோடிக்கு சொந்தமான 5 இடங்களில் சோதானை நடத்தப்பட்டது. அவற்றில் இரு லாக்கர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனையில் 10 கோடி பணமாகவும் 57 லட்சம் நகயாகவும் மற்றும் பல சொகுசு கார்களும் சிக்கியுள்ளன, இந்த சொத்துக்கள் யாவும் கணக்கில் காட்டப்படாதவை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

தாமோதர் மோடி ஒரு பங்கு தரகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கும் பல பாஜக தலைவர்களுக்கும் நேருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பா.ஜ.க வின் பாதி மானம் ஏற்கனவே கப்பில் ஏரிவிட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு மீதியும் போய்விடும்!

பாசிச கொள்கைக் கொண்ட இயக்கங்கள் பாதாலத்திற்கு சென்று கொண்டிருகிக்கின்றது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று  இருக்கின்றது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டிருக்கிராரா? என்ற அடிப்படையில் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த சோதனை பிரதமர் மன்மோகன் சிங் சிபிஐ மாநாட்டில் ‘பெரிய மீன்களின்’ மீதான விசாரணையும் முடிக்கி விட வேண்டும் என்று சொன்ன அதே நாளில் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கியுள்ள பதுக்கல் சொத்துக்களில் இதுவே அதிக அளவாகும். இதற்கு முன் 10.7 கோடி சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த 23 கோடி பதுக்கல் பற்றி நமது பெரிய தமிழ் ஊடகங்கள் வாய் திறக்காததே.

யார் யாரோ… யாரோடாவது பேசினால்… பிளாஷ் நியூஸ் போடும் தமிழ் ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை என்பது இவர்களின் நடுநிலைமையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதே போன்று மற்ற பண மோசடி பேர்வழிகளை, பிரதமர் மன்மோகன் சிங் வார்த்தையில் சொன்னால், ‘பெரிய மீன்களை’ சிக்க வைக்குமா இந்த வருமான வரித்துறையும் சிபிஐயும். பொருத்திருந்து பார்ப்போம்!!!?

தமிழ் செய்தி: அல்மதராஸி (இணையதள செய்தியாளர்),

எஸ்.கே ஹுசைன்