விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், அரசின் உதவி பெற விண்ணப்பத்தைப் பரிந்துரைக்க ரூ.200 லஞ்சம் பெற்ற சத்துணவு மேற்பார்வையாளருக்கு செவ்வாய்க்கிழமை 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழக அரசின் பெண் குழந்தைகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி பெற இவர் விண்ணப்பித்திருந்தார். அப்போது அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மாற்றுப் பணியில் சத்துணவு மேற்பார்வையாளர் எஸ்.சரஸ்வதி (57) பணியில் இருந்துள்ளார்.
ஆறுமுகத்தின் விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்வதற்கு ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஆறுமுகம் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார். போலீஸôரின் அறிவுரைப்படி, ஆறுமுகம் லஞ்சம் பணம் ரூ.200-யை சத்துணவு மேற்பார்வையார் எஸ்.சரஸ்வதியிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், சரஸ்வதி லஞ்சம் பெறும் போது கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகாம்பாள், சரஸ்வதிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.
தினமணி-17-11-2009
உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் நீங்கள் புகார் செய்ய வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்: