+2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் (பெயில் ஆனவர்கள்) உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்

+2 தேர்வில் தேர்சி பெறாதவர்கள் (பெயில் ஆனவர்கள்) உடனடி

தேர்வு எழுதி தேர்சி பெறலாம்.

+2 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களே! நீங்கள் ஒரு ஆண்டை வீணாக்காமல் படிப்பை தொடர அரசு உடனடி தேர்வை நடத்துகின்றது. எனவே பெயிலாகிவிட்டோம் என கவலைப்படாமல் உடனடியாக படிக்க ஆரம்பியுங்கள்.

இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி பெருவீர்கள். +2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் (பெயில் ஆனவர்கள்) உடனடி தேர்வு எழுத விரும்புவோருக்காக மே 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை கூறியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதி 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் பெயிலானவர்கள் வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் நடைபெறும் மேல்நிலைப்பள்ளி சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை வழங்கப்படும். 2010 மார்ச் மாதம் பள்ளிக்கூட மாணவர்களாக தேர்வு எழுதியவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்திலேயே எஸ்.எச். வகை விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, அங்கேயே 21ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்கவேண்டும். கட்டணத்தை பள்ளியில் பணமாக செலுத்தவேண்டும்.

ஒரு பாடத்திற்கு தேர்வுக்கட்டணம் ரூ.85, 2 பாடங்களுக்கு ரூ.135, 3 பாடங்களுக்கு ரூ.185.

கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி பெயிலான தனித்தேர்வர்களும், 2010-க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்களும் இந்த உடனடித்தேர்வை எழுதலாம்.

விண்ணப்ப படிவங்களை அரசுத்தேர்வு இயக்குனர் அலுவலகம், மண்டல அரசுத்தேர்வு துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வு துணை மண்டல அலுலவகங்களில் 28ம் தேதிக்குள் சேரும் வகையில் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

மதிப்பெண் சான்றிதழ் நகல், அல்லது இணையதளத்தில் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்கவேண்டும்.
உடனடி தேர்வு ஜுன் மாதம் 29ம் தேதி முதல் ஜுலை 9ம் தேதி வரை நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்).

தேர்வுத் அட்டவணை:

29.6.10 மொழி முதல்தாள்
30.6.10 மொழி இரண்டாம் தாள்
1.7.10 ஆங்கிலம் முதல்தாள்
2.7.10 ஆங்கிலம் இரண்டாம் தாள்
3.7.10 இயற்பியல், வணிகவியல்
5.7.10 வேதியியல், பொருளியல்
6.7.10 கணிதம், கணக்குப்பதிவியல், விலங்கியல் (பிற்பகலில் புவியியல்)
7.7.10 உயிரியல், வரலாறு, தாவரவியல் (பிற்பகலில் மைக்ரோ பயாலஜி)
8.7.10 உயிரி வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், அரசியல் அறிவியல் (பிற்பகலில் புள்ளியியல்)
9.7.10 வணிகக் கணிதம்

இந்த உடனடி தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம் ஓர் ஆண்டை வீனாக்காமல் நடப்பு ஆண்டிலேயே கல்லூரியில் சேரலாம். இப்படி துணை தேர்வு எழுதி தேர்சி பெறும் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் இந்த ஆண்டே சேர அரசு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. எனவே நேரத்தை வீணாக்காமல் படிக்க ஆரம்பியுங்கள் மாணவர்களே! உங்களுக்கு வழிகாட்ட நமது TNTJ மாணவர் அணி தயாராக உள்ளது

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி