177 நபர்கள் இரத்த தானம் , துபை மண்டல இரத்த தான முகாம் !

dubaitntj_blood_1 dubaitntj_blood_2 dubaitntj_blood_4 dubaitntj_blood_6அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் லத்திஃபா மருத்துவமனை இனைந்து நடத்திய ”மாபெரும் இரத்ததான முகாம்” கடந்த 13.12.2013 அன்று மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையிலும், முகாம் பொறுப்பாளர் சகோ.அஷ்ரப் அவர்களின் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

அல்லாஹுவின் உதவியால் இரத்ததானத்தில் தொடர்ந்து தமிழகத்தில் 9 வருடங்களாக முதலிடம் பெற்று வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா நாடுகளிலும் இரத்தானத்தில் சாதனை படைத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

காலை 8.30 மணிக்கு இரத்த‌தான முகாம் ஆரம்பம் என்றாலும் அதற்கு முன்பே பல சகோதரர்கள் வந்து காத்திருந்தனர். நேரம் செல்லச்செல்ல சகோதரர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

196 சகோதரர்கள் கலந்து கொண்டு 177 சகோதரர்கள் குருதி கொடையளித்தனர்.

இதில் இந்து, கிருத்துவ சகோதரர்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தது குறிப்பிடதக்கது.

மண்டல பொருளாளர் இணைச் செயலாளர் சகோ.நவாஸ் தலைமையில் தொண்டரணியினர் கள பணியாற்றினர்.