10 ஆம் வகுப்ப தேர்வு முடிவு: முஸ்லிம் மாணவி மாநிலத்தில் முதலிடம்

இன்று 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை அரசுப்
பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். அலஹம்துலில்லாஹ்.

ஆரனியை சேர்ந்த நஸ்ரின் பாத்திமா 493 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே UPSC (IAS,IPS,IFS) தேர்வுகளில் பைஸ்ல் என்ற மாணவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றார் என்பது
குறிப்பிடதக்கது.

SSLC தேர்வில் 82.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

செய்தி :
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி