”ரமளான் நேரடி ஒளிபரப்பு” வெளிநாட்டு வாழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம்! டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் முதல் பக்கச் செய்தி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்தில் பி.ஜே அவர்கள் நிகழ்த்தும் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் நெஞ்சங்கள் பார்த்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் www.tntj.net www.onlinepj.com ஆகிய இரு இணையதளங்களில் நாம் கூடுதல் தொழில் நுட்பத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றோம்!. இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி வெளிநாட்டு வாழ் தமிழ் பேசும் நெஞ்சங்களிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்களின் இறை உணர்வை வழுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் முன்னணி ஆங்கில பத்திரிக்கையான THE TIMES OF INDIA முதற் பக்கச் செய்தி (இன்று 21-8-2010) வெளியிட்டுள்ளது! அல்ஹம்துலில்லாஹ்!